திருச்சூர் : உலகப் புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தி எனப்படும் தலைமை அர்ச்சகராக, இளம் வயது ஆயுர்வேத மருத்துவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உலகப் புகழ் பெற்றது. இந்தக் கோவிலில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மேல்சாந்தி நியமிக்கப்படுவார். இந்த வகையில், அக்., 1 முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு மேல்சாந்தி பதவிக்கு, கிரண் ஆனந்த் கக்கட், 34, என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருச்சூரின் பாரம்பரிய ஓதிக்கண் குடும்பத்தைச் சேர்ந்த கிரண் ஆனந்த், ஆயுர்வேதம் படித்தவர்.
ரஷ்யாவில் ஆயுர்வேத கிளினிக் நடத்தி வந்தார். பாடகர், ‘யு டியூப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்குபவர் என பல முகம் கொண்ட கிரண் ஆனந்த், ”இது கடவுள் எனக்களித்த பரிசு,” என, மனம் நெகிழ்ந்து தெரிவித்துள்ளார்.மேல்சாந்தி பதவிக்காலத்தில் கோவிலிலேயே இருக்க வேண்டும் என்பதால், ஆறு மாதங்களுக்குப் பின் ஆயுர்வேத டாக்டர் தொழிலை தொடரப் போவதாக அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement