இந்தியாவில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் கௌதம் அதானி கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடத்திற்கு உயர்ந்தார்.
கடந்த 5 வருடத்தில் அதானி குழுமத்தின் அடுத்தடுத்து வர்த்தகக் கைப்பற்றல், வர்த்தக விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் கௌதம் அதானி-யின் மொத்த சொத்து மதிப்பு 1440 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.
இந்நிலையில் கௌதம் அதானி-யின் அண்ணனின் நிலைமை இப்போது என்ன தெரியுமா..?
அம்பானி அதானி போட்ட ரகசிய ஒப்பந்தம்.. நீயும் தொடாதே, நானும் தொடமாட்டேன்..!
இரண்டாவது அதானி
ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா வெளியிட்ட 2022 ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் கௌதம் அதானி இருக்கும் நிலையில், தற்போது டாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அதானி இடம் பிடித்துள்ளார்.
வினோத் சாந்திலால் அதானி
கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் சாந்திலால் அதானி ஐஐஎஃப்எல் வெல்த், ஹுருன் இந்தியா இணைந்து வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் 1.69 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 6வது பெரும் பணக்கார இந்தியராக உயர்ந்துள்ளார்.
துபாய்
துபாயில் வசிக்கும் வினோத் சாந்திலால் அதானி, கடந்த ஒரு வருடத்திலேயே எட்டாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆனால் அவருடைய தம்பி கௌதம் அதானி சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 5,88,500 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
அதானி குடும்பங்கள்
கௌதம் அதானி மற்றும் குடும்பம் ஐந்து ஆண்டுகளில் 15.4 மடங்கு சொத்து வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், வினோத் சாந்திலால் அதானி மற்றும் குடும்பத்தினர் 9.5 மடங்கு சொத்து வளர்ச்சி அடைந்துள்ளனர்.
49வது இடத்திலிருந்து 6வது இடம்
இந்திய பணக்காரர்கள் பட்டியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கௌதம் அதானி 8வது இடத்திலிருந்து முதலிடத்திற்கு உயர்ந்தார். இதேபோல் வினோத் சாந்திலால் அதானியின் 2018 பணக்காரர்கள் பட்டியலில் 49வது இடத்திலிருந்து இந்த ஆண்டு 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
36,969 கோடி ரூபாய்
வினோத் சாந்திலால் அதானி-யின் நிகர மதிப்பு கடந்த ஓராண்டில் 28 சதவீதம் அல்லது 36,969 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ஹுருன் அறிக்கையின்படி வினோத் சாந்திலால் அதானி சொத்து மதிப்பு 2021 முதல் ஒரு நாளுக்கு 102 கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்து வருகிறது.
தினமும் 1,612 கோடி ரூபாய்
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி சொத்து மதிப்பு கடந்த வருடத்தில் தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு நாளுக்கு 1,612 கோடி ரூபாய் வரையில் உயர்ந்து, அவருடைய மொத்த சொத்து மதிப்பு ஒரு வருடத்தில் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
கௌதம் அதானி சொத்து மதிப்பு
கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 116 சதவீதம் உயர்ந்து 5,88,500 கோடி ரூபாயை சேர்த்துள்ளார். இதன் மூலம் அவருடைய மொத்த சொத்து மதிப்பு 10,94,400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சுந்தர் பிச்சை ஷாக்.. சொத்து மதிப்பில் பெரிய ஓட்டை..!
Gautam Adani’s elder brother Vinod Shantilal Adani is the 6th richest Indian
Gautam Adani’s elder brother Vinod Shantilal Adani is the 6th richest Indian in IIFL Wealth Hurun India 2022 report