சரியாக படிக்காததால் தம்பியை அடித்தே கொன்ற அண்ணன்!!

தம்பி சரியாக படிக்காததால் அண்ணன் அவரை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலம் பாரமுண்டா பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன் சேனாபதி என்பவர் பி.எட். இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவரது சகோதரர் பிஸ்வா மோகன் எம்.பி. ஏ முடித்துள்ளார்.

தம்பி ராஜ்மோகன் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் பிஸ்வா மோகன் அவரை நன்றாகப் படிக்கும்படி வலியுறுத்தி வந்தார். இதன் காரணமாகச் சகோதரர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் வழக்கம்போல் தம்பியைப் படிக்கும்படி பிஸ்வா கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பிஸ்வா மோகன் தம்பி என்றும் பாராமல் ராஜ்மோகனை கடுமையாகத் தாக்கினார்.

இதில் ராஜ்மோகன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து மயங்கினார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.