சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துநிர்வாணமாக விரட்டி விட்ட கும்பல்| Dinamalar

மொரதாபாத், ;உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமியை துாக்கிச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, நிர்வாணமாக வீட்டுக்கு அனுப்பி வைத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஒருவரை கைது செய்துள்ளனர்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மொராதாபாத் மாவட்டம் போஜ்பூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, பக்கத்து கிராமத்தில் நடந்த திருவிழாவுக்கு சமீபத்தில் சென்றார். அப்போது, நான்கு இளைஞர்கள் அந்தச் சிறுமியை துாக்கிச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின், அந்தச் சிறுமியை நிர்வாணமாகவே வீட்டுக்கு செல்லும்படி விரட்டி விட்டு உள்ளனர். செய்வதறியாது திகைத்த சிறுமி, உடலில் துணி எதுவுமின்றி அழுது கொண்டே வீட்டுக்கு ஓடி வந்தார். இந்தக் காட்சியை சிலர், ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, சிறுமியின் தாய்மாமன் நேற்று போஜ்பூர் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், நான்கு இளைஞர்களில் ஒருவரை கைது செய்துள்ளனர்; மற்ற மூவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் உ.பி., யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.