சமீபத்திய ஒரு தெலுங்கு பேட்டியில், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ‘’ நான் தான் மணிரத்னம். செக்கசிவந்த வானம் படத்தை இயக்கியது நான் தான் என பேசியது’’ வைரலாகி வருகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன், தனது “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல நேர்காணல்கள் கொடுத்து வருகிறார். ’’தி லைஃப் ஆஃப் முத்து” என்ற பெயரில் வெளியான “வெந்து தணிந்தது காடு” படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்சனுக்கான ப்ரோமோஷன் பேட்டி கொடுத்துள்ளார்.
அந்த பேட்டியின் தொகுப்பாளர் , “நவாப்” (“செக்க சிவந்த வானம்” படத்தின் தெலுங்கு மொழிமாற்றம்) கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியது என்று தவறாக நினைத்து, ‘ சிம்பு, விஜய் சேதுபதி போன்ற பெரிய நட்சத்திரங்கள் நிறைந்த நடிகர்களுடன் ஒரு படம் எடுப்பது எவ்வளவு கடினம். அந்த படம் இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது என என்று கௌதமிடம் தொகுப்பாளர் கேட்டார்.
’’நவாப்’’ (செக்க சிவந்த வானம்”) படத்தை மணிரத்னம் இயக்கினார் என்று தொகுப்பாளரைத் திருத்துவதற்குப் பதிலாக முகத்தில் மெல்லிய புன்னகையுடன், விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சுவாமி ஆகியோருடன் பணியாற்றுவது மிகவும் கடினமாக இருந்தது. அவர்கள் மிகவும் பிஸியான நடிகர்கள், அவர்களின் தேதிகள் கிடைப்பது கடினம். நான் மணிரத்னம், அதனால் நான் கூப்பிட்டால் வருவார்கள். அதிகாலை 4.30, 5 என்றாலும் சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்கள். இதே கெளவும்மேனன் படமாக இருந்தால் சிம்பு 7 மணிக்கு வருவார். ஆனால் நான் மணிரத்னம் என்பதால் சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்கள். அந்த படம் உருவாகியது எனக்கு நல்ல மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுத்தது“ என கிண்டலான பதிலைச் சிரிக்காமல் சொல்லி முடித்தார். அந்த தொகுப்பாளரும், அவரது பிழையை உணராமல் அடுத்த கேள்விக்கு சென்றார். கௌதம் வாசுதேவ் மேனனின் இந்த கூல் ஆட்டியூட் அனைவரையும் ரசிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.
He really handled it well. What was the anchor thinking here pic.twitter.com/OKtXjB1YHF
— Madras Film Screening Club (@MadrasFSC) September 20, 2022
இந்த பேட்டியில் இருக்கும் பிழை வைரலானது சம்பந்தப்பட்ட சேனிலில் அந்த பிழை கேள்வியை நீக்கியுள்ளனர்.
முழு வீடியோ –