வதோதரா, குஜராத்தில், சிறை வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட விசாரணை கைதிகள் ஏழு பேர், சோப்பு தண்ணீரை குடித்ததால், நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வதோதரா மத்திய சிறைச் சாலையில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஏழு பேர் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, சிறைக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதி இல்லை.
ஆனால், மற்ற கைதிகளுக்கு அனுமதி உண்டு.இதையடுத்து, இவர்கள் மற்றவர்களுக்கு வரும் உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.இதையறிந்த சிறை நிர்வாகம் இந்த ஏழு பேரை மட்டும், தனியாக வேறு இடத்துக்கு மாற்றியது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ஜெயிலரை தாக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின், தண்ணீரில் சோப்பை கலந்து அதிகளவில் குடித்தனர். இதையடுத்து, அவர்கள்வதோதராவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜெயிலரை தாக்கிய சம்பவத்தில், இந்த ஏழு கைதிகள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement