புதுடில்லி :’டிவி விவாதங்களில் வெறுப்புணர்வை துாண்டும் பேச்சுகளை கட்டுப்படுத்தும் மிக முக்கிய பொறுப்பு, நிகழ்ச்சி நெறியாளருக்கு உள்ளது’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.’டிவி’ மற்றும் சமூக வலைதள ஊடகங்களில் வெறுப்புணர்வை துாண்டும் விதமான பேச்சு களை கட்டுப்படுத்துவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
நீதிபதி கே.எம்.ஜோசப் முன் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:டிவி மற்றும் சமூக ஊடகங்களில் பேசப்படும் கருத்துக்கள் ஒழுங்குமுறைக்கு உட்படவில்லை. டிவி விவாதத்தில் ஒருவர் வெறுப்புணர்வை துாண்டும் விதமாக பேசினால், அதை உடனடியாக நிறுத்த வேண்டிய பொறுப்பு நிகழ்ச்சி நெறியாளருக்கு உள்ளது. பத்திரிகை சுதந்திரம் என்பது தேவையானது தான். அமெரிக்காவில் உள்ள அளவுக்கு நம் நாட்டில் பத்திரிகை சுதந்திரம் இல்லை.
எனவே, பேச்சை எந்த எல்லையுடன் நிறுத்த வேண்டும் என்பது நமக்கு தெரிய வேண்டும்.இந்த விவகாரத்தில் அரசு விரோத நிலைப்பாட்டை எடுக்காமல் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும். வழக்கு நவ., 23க்கு ஒத்திவைக்கப்படுகிறது. அப்போது, வெறுப்புணர்வை துாண்டும் பேச்சை ஒழிக்க, சட்ட கமிஷன் அளித்த பரிந்துரையை செயல்படுத்துவது குறித்து அரசின் முடிவை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement