கோவை: பட்டியலினத்தை சேர்ந்தவரான திமுக எம்.பி. ராஜா இந்துக்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய பேசியதற்கு, கோவை மாவட்ட பாஜக தலைவர் பதிலடி கொடுத்த நிலையில், அவரை கைது செய்துள்ள காவல்துறையினர், தற்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மூலமும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்துக்களை விமர்சித்து பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா மீது கொடுத்த புகார்கள்மீது நடவடிக்கை எடுக்காத தமிழகஅரசு, ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. வன்முறை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது, பாலாஜி உத்தம ராமசாமி மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் ஜாமீன் மனு, மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.