அமராவதி: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா வரும் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 27-ம் தேதி மாலை ஆந்திர அரசு சார்பில் அம்மாநில முதல்வர், சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்குவது ஐதீகம். ஆதலால், தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி, திருப்பதி எம்.எல்.ஏ. கருணாகர் ரெட்டி, தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் அமராவதியில் நேற்று முதல்வர் ஜெகன் மோகனை சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்போது, வேத பண்டிதர்கள் வேதங்கள் முழங்க ஆசீர்வதித்தனர். அறங்காவலர் பொன்னாடை போர்த்தி மலர் செண்டு கொடுத்து, அழைப்பிதழ் வழங்கி முதல்வர் ஜெகனுக்கு அழைப்பு விடுத்தார்.