திரும்ப கொடுக்காட்டி சம்பளத்தில் கழிப்போம்.. அதிகமாக கொடுத்த போனஸை திரும்ப கேட்கும் ஹோண்டா!

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் நடப்பு மாதத்தில், அதன் ஊழியர்களுக்கு அதிகமான போனஸினை தவறுதலாக செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் தவறுதலாக அதிகமாக செலுத்தப்பட்ட போனஸின் ஒரு பகுதியை, மீண்டும் திருப்பிச் செலுத்த ஊழியர்களுக்கு ஒரு மெமோவினையும் அனுப்பியுள்ளது.

இந்த 3 பங்குகளை வாங்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் பரிந்துரை!

அதிக போனஸ்

அதிக போனஸ்

கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, சமீபத்தில் அதன் மேரிஸ்வில்லே, ஓஹியோ தொழிற்சாலையில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு குறிப்பை அனுப்பியுள்ளது. அதில் நிறுவனம் ஊழியர்களுக்கு போனஸ் தொகையை அதிகமாகச் செலுத்தியதாகவும், அதைத் திரும்பக் கொடுக்கும்படியும் கூறியுள்ளது.

சம்பளத்தில் பிடிக்கப்படும்

சம்பளத்தில் பிடிக்கப்படும்

மேலும் ஊழியர்கள் சரியான நேரத்தில் அதனை திரும்ப செலுத்தாவிடில், அதனை சம்பளத்தில் இருந்து பணம் தானாகவே கழிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதிகமான போனஸினால் சந்தோஷமாக இருந்த ஊழியர்கள் மத்தியில், ஹோண்டாவில் இந்த அறிவிப்பானது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

 

 எவ்வளவு?
 

எவ்வளவு?

கொரோனாவின் வருகைக்கு பிறகு இது போன்ற அறிவிப்புகள் மிக மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், அந்த சந்தோஷமானது நீடிக்கவில்லையே என்ற எண்ணத்தையும் ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இந்த போனஸ் தொகையானது எவ்வளவு கொடுக்கப்பட்டது? அதில் எவ்வளவு திரும்ப செலுத்தப்பட வேண்டும் என்பதை நிறுவனம் வெளியிடவில்லை.

 

இந்தியாவில் நுழைவு

இந்தியாவில் நுழைவு

சில ஊழியர்களிடம் இருந்து 10% போனஸினை கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஹோண்டா மோட்டார்ஸின் வருவாய் 4%க்கும் அதிகமாகவும், லாபமும் சற்று சரிந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்த ஆட்டோமொபைல் நிறுவனம் விரைவில் இந்தியாவில் SUV பிரிவில் நுழைய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு வருவோம் என கூறும் ஹோண்டா தெரிவித்துள்ளது.

 

ஹேப்பி

ஹேப்பி

ஒரு அலுவலகத்தில் பணிபுரியும்போது போனஸ் பெறுவது என்பது ஒரு அற்புதமான உணர்வு. அதனை வார்த்தையால் விவரிக்க முடியாது எனலாம். இது சில சமயங்களில் ஊழியர்களின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுகிறது. இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தும். அதிலும் தற்போதைய பணவீக்க நிலைகள் மற்றும் நிச்சயமற்ற பொருளாதாரம் ஆகியவற்றால், தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில், ஹோண்டாவின் இந்த அறிவிப்பானது நல்ல விஷயம் என்றாலும், கொடுத்த போனஸினை திரும்ப கேட்பது சற்று கடினமான மனநிலையை உருவாக்கியிருக்கலாம். எனினும் போனஸ் கொடுத்தவரை ஹேப்பி தான் என்கிறது ஒரு தரப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: honda ஹோண்டா

English summary

Honda to ask for refund of overpaid bonus

Honda to ask for refund of overpaid bonus/திரும்ப கொடுக்காட்டி சம்பளத்தில் கழிப்போம்.. அதிகமாக கொடுத்த போனஸை திரும்ப கேட்கும் ஹோண்டா!

Story first published: Thursday, September 22, 2022, 9:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.