தங்கம் (gold price) விலையானது சர்வதேச சந்தையில் இன்றும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இந்திய சந்தையிலும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது.
இது இன்னும் குறையுமா? குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பா? நிபுணர்களின் கணிப்பு?
தங்கத்தில் தொடர்ந்து செல் ஆஃப் டிரெண்டிங்கே உள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் காணலாமோ என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க நல்ல வாய்ப்பு!
தங்கம் விலை வீழ்ச்சி
எதிர்பார்த்ததை போலவே அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பு வலுவடைய காரணமாக அமைந்துள்ளது. இது மேற்கொண்டு பத்திர சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அமர்விலேயே, 7 மாத சரிவான 49,231 என்ற லெவலை தொட்டது.
மீண்டும் அதிகரிக்கலாம்
தற்போது வட்டி விகிதமானது முக்கால் புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், இது மீண்டும் அதிகரிக்கலாமோ என்ற எண்ணத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இது 2008-க்கு பிறகு இந்த அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பணவீக்கத்தினை குறைக்க தேவையான நடவடிக்கையினை மத்திய வங்கியானது எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கின்றது.
வட்டியில்லா முதலீடு?
தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீட்டினை குறைத்துள்ளது. இது மேற்கொண்டு தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுக்கலாம். இதனால் தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் இருக்காது எனலாம். தங்கம் விலை மட்டும் அல்ல, வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது.
முக்கிய லெவல்
தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் அவுன்ஸூக்கு 1647 – 1640 டாலர்களாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 1670 – 1782 டாலர்களாகவும் நிபுணர்கள் கணித்துள்ளது. இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 49,040 – 48,880 ரூபாயாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவலாக 49,610 – 49,760 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல் 56,250 – 55,640 ரூபாயாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவல் 57,680 – 58,110 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
காமெக்ஸ் தங்கம் விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை 7.05 டாலர்கள் குறைந்து, அவுன்ஸுக்கு 1668.20 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. தங்கம் விலையானது மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 0.42% குறைந்து, 19.400 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 49,499 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ள போதில், இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிலோவுக்கு 34 ரூபாய் அதிகரித்து, 57,332 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 4640 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 37,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 5062 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 88 ரூபாய் குறைந்து, 40,496 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 50,620 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலை குறைந்திருந்தாலும், ஆபரண வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 20 பைசா அதிகரித்து, 62.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 624 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 62,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.46,400
மும்பை – ரூ.46,000
டெல்லி – ரூ.46,150
பெங்களூர் – ரூ.46,050
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.46,400
gold price on 22nd September 2022: gold prices nearly in 7 month low after federal rate hike
gold price on 22nd September 2022: gold prices nearly in 7 month low after federal rate hike