நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை… PFI அமைப்பை சேர்ந்த சுமார் 100 பேர் கைது

மதுரை, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம், கேரளாவில் சுமார் 60 இடங்களில் NIA அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
image
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உள்ளவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போலவே எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடந்துவருகிறது. கேரளாவிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனையின் ஒருபகுதியாக கடலூரில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் அமைப்பின் மாவட்டத் தலைவர் பியாஸ் அகமதுவை பிடித்து சென்றுள்ளனர்.  தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே முத்துத் தேவன் பட்டியில் செயல்படும் அறிவகம் என்ற மதரஸாவில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.‌ இதே போன்று கம்பம் பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பைச் சேர்ந்த யாசர் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இதனிடையே முத்து தேவன் பட்டி அறிவகம் மதரஸாவில் நடக்கும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாம் அமைப்பினர் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
image
புரசைவாக்கத்தில் உள்ள மாநில தலைமை அலுவலகம் மூக்காத்தால் தெருவில் உள்ளது. மூன்றாவது தளத்தில் உள்ள அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் அவர்களது நிர்வாகிகளும் உள்ளனர் . அவர்களிடம் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டல தலைவர் பக்கரி அகமது தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
மேலும் சிஆர்பிஎப் வீரர்களும் 20-க்கும் மேற்பட்டவர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வருவதால் வேப்பேரி உதவி ஆணையர் அரிகுமார் தலைமையில் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.