திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நாபலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற நடுநிலைப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், மாணவர்கள் சாப்பிடுவதற்கு சில்வர் தட்டு இல்லாமல் சிரமப்பட்டனர். இதுகுறித்து திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் சுஜாதா குமாருக்கு தலைமை ஆசிரியர் தெரிவித்தார். இதையடுத்து 140 மாணவர்களுக்கு சில்வர் தட்டு, டம்ளர் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது.முன்னதாக விழாவுக்கு திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கூலூர் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் சுஜாதா குமார் வரவேற்று பேசினார்.
ஒன்றிய நிர்வாகிகள் காஞ்சிபாடி சரவணன், குப்பன், அர்ஜுனன், நல்லாட்டூர் கமலநாதன், தும்பிக்குளம் பூக்கடை கோபி, காஞ்சிபாடி யுவராஜ், மகாதேவன், பெருமாள், வார்டு உறுப்பினர் முரளி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.