வடலூர்: வடலூர் அருகே நைனார்குப்பம் குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் வடலூர் அருகே நயினார்குப்பம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 2000க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து குளத்தை முழுவதுமாக மூடி உள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த குளத்து நீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.