திருவனந்தபுரம்: 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் தற்போது 8 அடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 64 கனஅடியாக குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் 40 அடியாக குறைந்தால் மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.