Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் ஒரு மாயாஜாலம், அதில் மயங்காதவர்களே இருக்க முடியாது. வேலை நெருக்கடியில் சோர்ந்து போய் இருக்கிறீர்களா ரிலாக்ஸ் செய்ய ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்க வாருங்கள்.
ஒளியியல் மாயை என்கிற ஆப்டிகல் இல்யூஷன் இன்று நேற்று உருவானது இல்லை. இது கி.மு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இருப்பதாக சான்றுகள் உள்ளன. கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஃபிளெமிங்கோ பறவைகள் கூட்டத்தில் இதயம் உள்ள ஒரு பறவை இருக்கிறது. அந்த பறவையை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த சவால் மிகவும் கடினமானது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காட்சிப் பிழை, ஒரு மாயாஜாலம், ஒரு தந்திரம், ஒரு இல்யூஷன் புதிர் விளையாட்டு, உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, மூளையைக் குழப்பும் புதிர், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து விடையைத் தேடினால் எளிதாக விடையக் கண்டுபிடித்துவிடலாம்.
இந்த படம் ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது. ஐரோப்பாவில் அதிக அளவில் காணப்படும் ஃபிளெமிங்கோ பறவைகளை வைத்து இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிங்க் நிறத்திலும் பர்பிள் நிறத்திலும் ஃபிளெமிங்கோ பறவைகள் கூட்டமாக இருக்கிறது. இதில் இதயம் உள்ள பறவையை 15 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். அதென்ன, எல்லா பறவைகளுக்கும் இதயம் இருக்கும்தானே. அப்படி என்றால், இதயம் உள்ள பறவையைக் கண்டுபிடி என்றால் எப்படி என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு கேட்கிறது. இந்த படத்தில் ஒரு ஃபிளெமிங்கோ பறவையின் உடலில் மட்டும் லவ் சிம்பளான இதயம் வரையப்பட்டிருக்கிறது. அதை கூர்மையாகப் பார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
இந்நேரம், நீங்கள் இந்த படத்தில் இதயம் உள்ள பறவையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் செம ஷார்ப்தான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இதயம் உள்ள பறவையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய அந்த பறவை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். அந்த பறவை பிங்க் நிறத்தில் உள்ளது. இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
நீங்கள் இன்னும் இதயம் உள்ள ஃபிளெமிங்கோ பறவையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், அந்த பறவை எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“