கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ பெரும் அளவில் குறைத்தது.
எனவே கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் மட்டுமல்லாமல் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் குறைந்தது.
அதனால் கடன் வாங்கியவர்கள் அதில் அதிக பயன் அடைந்தார்கள். ஆனால் பிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் பெரும் அளவில் தங்களது லாபத்தை இழந்தனர்.
பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. இது தான் சரியான நேரம்.. !
ரெப்போ வட்டி விகிதம்
இப்போது உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் பொருளாதார சுணக்கம் மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு என பல காரணங்களால் மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை இப்போது ஆர்பிஐ உயர்த்தியுள்ளது.
பிக்சட் டெபாசிட் திட்டங்கள்
எனவே பிரபல வங்கி நிறுவனங்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 7 முதல் 7.5 சதவீதம் வழங்குகிறன. அதிலும் சில ஸ்மாஃப் ஃபினான்ஸ் வங்கிகள் தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு இன்னும் கூடுதல் வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
ஏன் பிக்சட் டெபாசிட் முதலீடு?
பிர முதலீடு திட்டங்களுடன் ஒப்பிடும் போது பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்துவிட்டால் முதிர்வு காலம் வரை எந்த மாற்றமும் இருக்காது. எனவே முதலீடு செய்யும் போது என்ன முதிர்வு தொகை கிடைக்கும் என கூறப்பட்டதோ அது அப்படியே கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் எந்த ரிஸ்க்கும் கிடையாது. சந்தை அபாயங்களும் கிடையாது. எனவே ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களில் சிறந்த தேர்வாக பிக்சட் டெபாசிட் உள்ளது.
கோடீஸ்வரர் ஆக முடியுமா?
பிக்சட் டெபாசிச் திட்டத்தில் முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆக இவை மூன்றும் தேவை. முதலில் பொறுமை. இரண்டாவது பணம். மூன்றாவது அதற்கான நேரம். உங்களுக்கு பொறுமை இருந்தால், தேவையான பணம் இருந்தால், காத்திருக்க முடியும் என்றால் பிக்சட் டஎபாசிட்டில் முதலீடு செய்யும் தொகையை 20 வருடங்கள் முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆக முடியும்.
எப்படி?
ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி விகிதம் வாபம் வழங்கும் 10 வருடன் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 10 வருடத்திற்குப் பிறகு 5255873 ரூபாயாகக் கிடைக்கும். அதனை மீண்டும் 10 வருடத்திற்கு 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 1.10 கோடியாகத் திரும்பக் கிடைக்கும். பிக்சட் டெபாசிட் முதலீடு திட்டத்தை பொறுத்தவரையில் எவ்வளவு அதிக தொகை, எவ்வளவு நீண்ட காலம் முதலீடு செய்கிறீர்கள் என்பதே லாபத்தை முடிவும் செய்யும். பிபிஎப் அல்லது மியூச்சுவல் போன்ற திட்டங்களில் குறைந்த தொகையை முதலீடு செய்தாலே இதை விட அதிக லாபமும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
How To Become Crorepati Using Investment in Fixed Deposit?
How To Become Crorepati Using Investment in Fixed Deposit? | பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தும் கோடீஸ்வரர் ஆகலாமா? எப்படி?