புதுச்சேரி: புற்றுநோய் விழிப்புணர்வு..4000 சதுர அடியில் பூக்களை கொண்டு புற்றுநோய் ரிப்பன்!

புதுச்சேரியில் விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் உலக ரோஸ் தினத்தை முன்னிட்டு 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் 4000 சதுர அடியில் 90 குரு ரோஜா பூக்களைக்கொண்டு புற்றுநோய் ரிப்பன் வடிவத்தை வரைந்து உலக சாதனை நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
image
கனடாவை சேர்ந்த மிலாண்டா ரோஸ் என்ற சிறுமி புற்றுநோயால் உயிரிழந்தார். அவரை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் உலக ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்றைய காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சந்தோஷத்தையும், தைரியத்தையும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இன்று கிரஸ்ண்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் நசிரா பேகம் என்ற மாணவி புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி கைப்பந்து விளையாட்டு மைதானத்தில் 80 அடிக்கு 50 அடி ( 4000 சதுர அடி ) அளவில் புற்றுநோய் ரிப்பன் வடிவத்தை, 100 கிலோ ரோஜா பூக்களை பயன்படுத்தி உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
image
இதனை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து உலக சாதனை சான்றிதழ் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு உலக சாதனையை படைத்த மாணவியை பாராட்டி கவுரபடுத்தினர்.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.