சென்னை: இயக்குநர் சாம் ஆன்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், அருண்பாண்டியன், சின்னிஜெயந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ட்ரிகர்.
காமெடி கலந்த ஆக்ஷன் படமான ட்ரிகர் ரசிகர்களிடையே பெரும் ஆவலை தூண்டியுள்ளது.
இப்படத்தில் நடித்த நடிகர் சின்னிஜெயந்த் நமது பிலிம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
கற்றுக்கொள்ளுங்கள்
கேள்வி: நடிகர் அதர்வா குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: நான் அவர் அப்பா முரளியுடன் இணைந்து 22 படங்கள் பணியாற்றியுள்ளேன். இதயம் படத்தில் நான் லிப்ட்டில் சென்று காதலை கூறி விட்டாய் என்று கேட்கும் காட்சி இன்றளவும் எனது மனதில் உள்ளது. அவருடன் எனக்கு எப்படி கெமிட்ரி இருந்ததோ, அதே போல் நடிகர் அதர்வாவுடன் கெமிஸ்ட்ரி எனக்கு நன்றாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் அவருடன் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றுவேன் என்றார். மேலும் அவர் கூறுகையில், ட்ரிகர் படத்தை இயக்குநர் சாம் ஆன்டனி அருமையாக இயக்கியுள்ளார். இந்த படத்தில் காமெடி, சண்டைக்காட்சி, சென்டிமென்ட், பாடல் ஆகிய அனைத்தையும் நான் செய்துள்ளேன் என்றார்.
கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது
கேள்வி: நடிகர் அதர்வா குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்:நான் அவர் அப்பா முரளியுடன் இணைந்து 22 படங்கள் பணியாற்றியுள்ளேன். இதயம் படத்தில் நான் லிப்ட்டில் சென்று காதலை கூறி விட்டாயா என்று கேட்கும் காட்சி இன்றளவும் எனது மனதில் உள்ளது. அவருடன் எனக்கு எப்படி கெமிட்ரி இருந்ததோ, அதே போல் நடிகர் அதர்வாவுடன் கெமிஸ்ட்ரி எனக்கு நன்றாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் அவருடன் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றுவேன் என்றார். மேலும் அவர் கூறுகையில், ட்ரிகர் படத்தை இயக்குநர் சாம் ஆன்டனி அருமையாக இயக்கியுள்ளார். இந்த படத்தில் காமெடி, சண்டைக்காட்சி, சென்டிமென்ட், பாடல் ஆகிய அனைத்தையும் நான் செய்துள்ளேன் என்றார்.
கிருத்திகா உதயநிதிக்கு நன்றி
கேள்வி: பேப்பர் ராக்கெட் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: இந்த படத்தில் எனக்கு அப்பா கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை அமைத்து கொடுத்த இயக்குநர் கிருத்திகா உதயநிதிக்கு நன்றி. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கடலுக்கு நடுவே நடைபெற்றது. கிருத்திகா உதயநிதி, காட்சிகள் சொன்ன விதமும், காட்சி அமைப்பும் அழகாக இருந்தது. அவரது இயக்குநர் பணி சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.
சகல ரகளை
கேள்வி: தற்பொழுது மிமிக்ரி ஏதாவது செய்வதுண்டா?
பதில்: நாங்கள் ஆரம்பித்து வைத்த சகல ரகளை நிகழ்ச்சி மூலம் திறமையான இளைஞர்கள் உருவாகியுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் அனைவரும் நன்றாக திறமையை வெளிப்படுத்துகின்றனர். எங்களை போன்ற மூத்த கலைஞர்கள் திரைத்துறையில் இருக்கும்போது, திறமையான இளைஞர்கள் திரைத்துறைக்கு சாதனை புரிய வேண்டும் என்றார்.
மக்களுக்காக சினிமா
கேள்வி: தற்போது உள்ள சினிமாத்துறை குறித்து உங்கள் கருத்து..
பதில்: அந்த காலக்கட்டத்தில் மக்களுக்காக சினிமா எடுத்தார்கள். மக்களின் பொழுது போக்கு சினிமா மட்டுமே. ஆனால் தற்போது மக்களுக்காக சினிமா எடுக்காமல், நடிகர், தயாரிப்பாளர், வியாபாரம் போன்றவற்றிற்காக மட்டுமே சினிமா எடுக்கின்றனர் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/gvJ9hsD3-ms இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.