ஐடி துறையில் சமீப காலமாக பெரும் விவாத பொருளாக இருந்து வந்த moonlighting என்ற வார்த்தை, தற்போது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரையில் எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்த ஐடி நிறுவனங்கள், தற்போது பணி நீக்க நடவடிக்கையிலும் இறங்கியுள்ளன.
சில தினங்களுக்கு முன்பு விப்ரோ நிறுவனம் moonlighting என்பதை சுட்டிக் காட்டி 300 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.
ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. work from anywhere ஆப்ஷன் உடன் வேலை..!!
பெரும் அதிர்ச்சி
இது விப்ரோ ஊழியர்கள் மத்தியில் மட்டும் அல்ல, ஒட்டு மொத்த ஐடி துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விப்ரோ நிறுவனம் மறைமுகமாக வேலை பார்த்து வந்த 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக விப்ரோ அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ஐடி நிறுவனங்கள் இதுவரையில் கடுமையான எச்சரிக்கையினை விடுத்து வந்த நிலையில், தற்போது செயலிலும் இறங்கியுள்ளது.
மூன்லைட்டிங் கலாசாரம்
பெருகி வரும் மூன்லைட்டிங் கலாச்சாரத்திற்கு ஒரு சில நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது எதிர்ப்புகளையே பதிவு செய்து வந்தன. ஏற்கனவே விப்ரோவின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜியும் இது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் தற்போது அதனை செயல்படுத்தியும் உள்ள நிலையில், இது அடுத்தடுத்து மற்ற ஐடி நிறுவனங்களும் இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விதி மீறல் இல்லை
விப்ரோ ரிஷாத் பிரேம்ஜியின் இந்த நடவடிக்கையினை பலரும் கடுமையான நடவடிக்கை என்று கூறி வருகின்றனர். ஒரு சில ஊழியர்கள் மூன் லைட்டிங் என்பது ஏமாற்று வேலை இல்லை. நாங்கள் போட்டிக்காக வேலை செய்யவில்லை. நாங்கள் ப்ரீ லான்சிங் செய்கிறோம். அதற்காக இது நிறுவனத்திற்கு உண்மையாக இல்லை என்பது அர்த்தமல்ல. இது விதிமீறலும் இல்லை.
சரியான முடிவல்ல
விப்ரோ தலைவர் இதனை ஏமாற்றுதல் என்கிறார். ஆனால் ஊழியர்களோ நாங்கள் பயன்படுத்தாத எங்களது திறன்களை பயன்படுத்துகிறோம். விப்ரோ வணிகப்பிரிவின் தலைவரின் அனுமதியுடன் இரண்டாம் நிலை பணியை மேற்கோள்ள அனுமதிக்கிறது. எனினும் விப்ரோவின் இந்த முடிவு சரியானது அல்லது, மூன் லைட்டிங்காக பணி நீக்கம் என்பது சரியான முடிவல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது சரியா? தவறா?
மேலும் ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் அவர்கள் விரும்பியதை செய்ய அனுமதிக்க வேண்டும். இது குடும்பத்தினை ஆதரிக்க வருமானத்தினை பெருக்க கூடுதல் வேலையினை செய்யலாம். இதனால் நிறுவனத்தின் செயல்திறன் பாதிக்காது. ஒரு சிலர் இதனை எதிர்த்தாலும், இது நடக்கும் ஒன்று தான். எதிர்காலத்தில் இது மீண்டும் வரலாம். இது சரியா தவறா என்பது பிரச்சனை அல்ல. ஆனால் நிறுவனங்கள் மூன் லைட்டிங் குறித்து விதிகளை உருவாக்கி வருகிறார்கள். எதிர்காலத்தில் விதிகள் இன்னும் கடுமையாகலாம்.
Wipro’s decision too harsh? IT employees shocked at moonlighting firing
Wipro’s decision too harsh? IT employees shocked at moonlighting firing