மியான்மரில் சிக்கிய32 இந்தியர்கள் மீட்பு| Dinamalar

புதுடில்லி:தாய்லாந்தில் வேலைக்காக சென்று மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள 90 இந்தியர்களில், 32 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை வாங்கி தருவதாக சமூக வலைதளத்தில் போலி விளம்பரங்கள் வந்தன.

இதை நம்பி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்ற 80 – 90 பேர், தாய்லாந்து எல்லையில் உள்ள மியான்மர் நாட்டின் மியாவாடி என்ற இடத்தில் சிக்கினர். இந்தப் பகுதி உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், சிக்கியவர்களை மீட்பதில் சிரமம் நீடித்தது. இந்நிலையில், 90 பேரில், 32 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.