இங்கிலாந்தில் `மோஸ்ட் வான்டட் கிரிமினல்’ எனத் தேடப்பட்டவருடன் ஒரு வருடம் உறவில் இருந்தது குறித்து பெண் ஒருவர் தகவல் வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “என் பெயர் ஸ்டெல்லா பாரிஸ். 35 வயதான எனக்கு சமீபத்தில் தான் அந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது, 2003-ல் பிரையன் வாட்டர்ஸ் எனும் பெண்ணை அவரின் குழந்தைகள் கண் முன் கொலை செய்த ஒரு கொடூரருடன் நான் ஒரு வருடமாக தங்கியிருந்திருக்கிறேன். ஆனால் அது எனக்கே அப்போது தெரியாது.
கொலை செய்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2012 ல் பிரிட்டிஷ் குற்றவாளி கிறிஸ்டோபர் கெஸ்ட் மோர், மால்டா ஸ்ட்ரிப் கிளப்பில் ஆண்ட்ரூ லாம்ப் என எனக்கு அறிமுகமானார். என் செல்வத்தால்தான் ஆரம்பத்தில் ஈர்க்கப்பட்டார். ஆனால், இறுதியில் உண்மையான அன்பை செலுத்தினார். உண்மையில் அவர் என்னுடன் இருந்த போது, நேர்மறை சிந்தனை, வணிகம் மற்றும் பணம் சம்பாதிப்பதில் தொலைநோக்கு அணுகுமுறை கொண்டவராகதான் இருந்தார். ஆனால், அவருடைய சில செயல்பாடுகளில் அவரிடம் ஏதோ தவறு இருப்பதாக எனக்கு உணர்த்தியது, ஆனால் அவர் ஒரு குற்றவாளி என்று எனக்குத் தெரியாது.
புகைப்படங்கள் எடுக்கப்படுவதையும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும் வேண்டாம் எனத் தடுத்திருந்தார். அவர் வீட்டில் இருக்கும் போது முடியைக் கட்டியிருப்பார், ஆனால் வெளியே வரும்போது அவற்றை அவிழ்த்து விடுவார். நன்றாகதான் இருந்தோம். ஒருநாள் காலை உணவு முட்டைகளை சமைக்க சொன்னார். அவற்றில் ஒன்று சரியாக வேகாமல் இருந்தது. அதை எடுத்து என்மீது வீசினார். அது பெரும் சண்டையாக மாறியது. அவர் என்னை அடித்து துன்புறுத்தியதால், நான் அங்கிருந்து புறப்பட்டு என் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன். அதன் பிறகு அவருடன் எந்த தொடர்பும் இல்ல
2013-ல் பிரிந்தது, அதன் பிறகு வேறு இடத்துக்கு மாறிவிட்டேன். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைடைய தாயார் ஒரு செய்தித்தாளில் காட்டியபோதுதான், தான் காதலித்தவன் முன்னாள் கொலைகாரன் என்பதைக் கண்டுபிடித்தேன். அவர் ஒரு கொலைகாரன் என்ற உண்மை என்னை உடைத்தது. சித்திரவதையின் விவரங்கள் என்னை திகிலடையச் செய்தன” எனத் தெரிவித்திருக்கிறார்.
2019-ல் கிறிஸ்டோபர் கெஸ்ட் மோர் கண்டுபிடிக்கப்பட்டு, இப்போது தனது குற்றங்களுக்காக 24 ஆண்டுகள் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.