ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி :அமெரிக்க குற்றச்சாட்டிற்கு வட கொரியா மறுப்பு| Dinamalar

பியாங்யங்: ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்கள வழங்கவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியா தொடர்ச்சியாக அணு ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களை பெருமளவு விநியோகிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனை வடகொரியா மறுத்துள்ளது.


இது குறித்து வடகொரியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்யாவிற்கு அணு ஆயுதங்களை விநியோகிக்கும் திட்டமும் இல்லை. ஏற்றுமதி செய்யும் திட்டமில்லை. அமெரிக்கா வீண் வதந்தியை பரப்புகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு முதல் ரஷ்யா – வடகொரியா இருநாடுகள் நட்புறவு நாடுகளாயின. அதன் பின்னர் 2019-ம் ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.