செப்டம்பர் 22ஆம் தேதி லெபனான் நாட்டின் லெபனான் வங்கிகள் சங்கம் (ABL) மக்கள் அதிகளவில் டெபாசிட் தொகையைத் திரும்பப் பெறுவதால், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் நிரந்தரமாக மூடப்படும் என்று கூறியது.
இதைத் தொடர்ந்து மக்கள் வேறு வழியில்லாமல் பணப் பரிமாற்றத்திற்காகக் கிரிப்டோகரன்சி பக்கம் திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிசிஎஸ் ஊழியர்களே ஆபீஸ் கிளம்புங்க.. வாரம் 3 நாள் கட்டாயம்.. புதிய உத்தரவு..!
லெபனான் வங்கிகள்
லெபனான் நாட்டு வங்கிகள் “காலவரையறையின்றி” மூடப்பட்டிருக்கும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் அந்நாட்டு மக்கள் மிகவும் கோபமடைந்து கலவரத்தில் இறங்கியுள்ளனர். வங்கியில் டெபாசிட் செய்த மக்கள் தங்கள் சேமிப்பைப் பெற முடியாததால் மக்கள் மத்தியில் கோபம் அதிகரித்துள்ளது.
ஏழு வங்கிக் கிளைகளில் திருட்டு
கடந்த வாரம் ஏழு வங்கிக் கிளைகளில் நடந்த திருட்டுக்குப் பிறகு வங்கிகள் மூடப்பட உத்தரவிடப்பட்டு உள்ளது. மக்கள் தொகையில் முக்கால்வாசிப் பேர் ஏழ்மையில் மூழ்கியிருக்கும் இந்த நேரத்தில், வங்கித் துறையானது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வைப்புத்தொகையை முடக்கி, மக்கள் எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதற்கான வரம்புகளை வைத்து வருகிறது.
செப்டம்பர் 16
லெபனான் அரசு பொருளாதாரம் நெருக்கடி காரணமாகச் செப்டம்பர் 16 அன்று மக்கள் வங்கி டெபாசிட் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கும் அளவுகளைக் கட்டுப்பாடுத்தியுது. இதோடு அந்நாட்டில் இருக்கும் அனைத்து வங்கிகளையும் ஒரு வாரத்திற்கு மூடி உத்தரவிட்டது.
சாமானிய மக்கள்
இந்த உத்தரவு லெபனான் நாட்டில் உள்ள சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது மட்டும் அல்லாமல் பல வர்த்தகங்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தது இந்த நிலையில் கிரிப்டோகரன்சி பலருக்கும் கைகொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கிரிப்டோகரன்சி
லெபனானில் உள்ள இளைஞர்கள் நிதிக் குழப்பத்திலிருந்து தப்பிக்கத் தற்போது கிரிப்டோகரன்சியை அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளதாகவும், இந்நாட்டில் 2021 முதல் கிரிப்டோகரன்சி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் Cryptosate தெரிவிக்கிறது.
Binance
உலகின் முன்னணி கிரிப்டோ கரன்சி வர்த்தகத் தளமான Binance இன் தலைமை நிர்வாக அதிகாரி சாங்பெங் ஜாவோவும் இந்தச் செய்தியை ட்வீட் செய்துள்ளார். ஜாவோ-வின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, நூற்றுக்கணக்கான மக்கள் கிரிப்டோகரன்சிகளின் உரிமை கொள்ள ஆதரவைத் தெரிவித்தனர்.
வர்த்தகங்கள்
லெபனான் நாட்டில் வங்கிகள் மூடப்பட்ட நிலையில், கரன்சி பரிமாற்றம் பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆனால் கிரிப்டோகரன்சி பரிமாற்றம் உதவி செய்யும் காரணத்தால் தற்போது பல வர்த்தகங்கள் மூடப்படாமல் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும் பலர் டிவீட் செய்துள்ளது.
நிதி நெருக்கடி
ஆகஸ்ட் 2019 முதல் லெபனான் நாட்டில் நிதி நெருக்கடியை அனுபவித்து வருகிறது, இது 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெய்ரூட்டில் வெடிப்பு மற்றும் தொற்றுநோயால் மோசமாகிவிட்டது. 2020 ஆம் ஆண்டில், லெபனான் சுமார் 83 மில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்கும் என்று IMF கணித்தது.
Lebanon banks to close indefinitely Lebanese turn to cryptocurrency; Deep economic crisis from 2019
Lebanon’s banks to close indefinitely Lebanese turn to crypto; Deep economic crisis from 2019