‘வங்கி உரிமம் ரத்து’ ஆர்பிஐ அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. மக்கள் பணத்தின் நிலை என்ன..?!

இந்திய ரிசர்வ் வங்கி எவ்வளவு வட்டியை உயர்த்தும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் வியாழக்கிழமை மக்களை அதிர வைக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

நேற்று தான் புனே-வை ரூபாய் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து வங்கியை மொத்தமாக மூட உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்த நிலையில் இன்று மற்றொரு கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அடுத்தடுத்து இத்தகைய அறிவிப்புகள் வெளியாகும் காரணத்தால் வங்கிகள் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்ட வங்கி எது தெரியுமா..?

நுகர்வோர் தனியுரிமையை பாதுகாக்க புதிய சட்டம்.. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தகவல்!

தி லக்ஷ்மி கோ ஆப்ரேட்டிவ் பேங்க் லிமிடெட்

தி லக்ஷ்மி கோ ஆப்ரேட்டிவ் பேங்க் லிமிடெட்

ரிசர்வ் வங்கி செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூர் பகுதியில் உள்ள தி லக்ஷ்மி கோ ஆப்ரேட்டிவ் பேங்க் லிமிடெட் என்ற கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்துச் செய்ததுள்ளதாக அறிவித்துள்ளது.

செப்டம்பர் 22

செப்டம்பர் 22

இதன் விளைவாக, செப்டம்பர் 22, 2022 முதல் தி லக்ஷ்மி கோ ஆப்ரேட்டிவ் பேங்க் வணிகம் நேரம் முடிவடையும் நேரத்தில் இருந்து, இவ்வங்கி எவ்விதமான வணிகத்தை மேற்கொள் கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கி
 

ரிசர்வ் வங்கி

மத்திய வங்கி கூட்டுறவு ஆணையர் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் வங்கியை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்து, வங்கிக்கு ஒரு கலைப்பாளரை (Liquidator)நியமிக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள்

மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள்

வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லை. எனவே, இது 1949 வங்கி ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 56 உடன் படிக்கப்பட்ட பிரிவு 11(1) மற்றும் பிரிவு 22 (3) (d) விதிகளுக்கு இணங்கவில்லை. இதேபோல் அடிப்படை வங்கிகளுக்கான தரத்தை நிர்ணயம் செய்யும் பல விதிகளுக்கு இவ்வங்கி இணங்கவில்லை.

வைப்பு நிதியாளர்கள் நலன்

வைப்பு நிதியாளர்கள் நலன்

இதனால் இந்த வங்கி தொடர்ச்சியாக இயங்கினால் வைப்பு நிதியாளர்களின் நலன்களுக்குப் பாதகமானது என அறிவித்து வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளது ரிசர்வ் வங்கி.

தற்போதைய நிதி நிலையில் இவ்வங்கி அதன் தற்போதைய டெப்பாசிட் கணக்கு வைத்துள்ளவர்களுக்குப் பணத்தை முழுமையாகச் செலுத்த முடியாத மோசமான நிலையில் தான் உள்ளது என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

5,00,000 ரூபாய் DICGC காப்பீடு

5,00,000 ரூபாய் DICGC காப்பீடு

தி லக்ஷ்மி கோ ஆப்ரேட்டிவ் பேங்க்-ஐ கலைக்கும்போது, ஒவ்வொரு டெபாசிட்டரும் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (DICGC) அமைப்பு உத்தரவாதம் அளிக்கும் பண உச்சவரம்பான 5,00,000 ரூபாய் வரையிலான தொகையை டெபாசிட் காப்பீட்டுத் தொகையாகப் பெற முடியும்.

99 சதவீத டெபாசிடர்கள் Safe

99 சதவீத டெபாசிடர்கள் Safe

இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் படி, தி லக்ஷ்மி கோ ஆப்ரேட்டிவ் பேங்க்-ன் சுமார் 99 சதவீத டெபாசிடர்கள் DICGC இலிருந்து தங்கள் வைப்புத் தொகையின் முழுத் தொகையையும் பெற உரிமை பெற்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 13, 2022 நிலவரப்படி, மொத்த வைப்புத் தொகையில் 193.68 கோடி ரூபாயை DICGC கீழ் ஏற்கனவே செலுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI cancels licence of Maharashtra-based Laxmi Co-operative Bank; depositors gets DICGC insurance upto 5 lakhs

RBI cancels licence of Maharashtra-based Laxmi Co-operative Bank; 99 percent gets DICGC insurance upto 5 lakhs

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.