வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு.. பங்குச்சந்தை தடுமாற்றம்.. ஆர்பிஐ முடிவு என்ன..?

அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியைப் பந்தாடி வரும் பணவீக்கத்தைக் குறைக்க அந்நாட்டின் மத்திய வங்கி இரண்டு நாள் நாணய கொள்கை முடிவில் பல தரப்பினர் எதிர்பார்த்த படியே தனது பென்ச்மார்க் வட்டியை 0.75 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆனால் இதன் விளைவு அடுத்த சில மணிநேரத்தில் இந்திய சந்தையில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது, வட்டி விகித உயர்வால் இந்திய சந்தையில் இருந்த அன்னிய முதலீடுகள் வெளியேறத் துவங்கியது.

இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஓரே நாளில் 42 பைசா வரையில் குறைந்து பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் அளவீட்டை இழந்து 80.43 ரூபாய் அளவில் சரிந்துள்ளது. இது இந்திய வர்த்தகச் சந்தையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வுக்குப் பின்பு அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் சுமார் 20 வருட உயர்வான 111.72 அளவீட்டை எட்டியது. இதனால் ரூபாய் மதிப்பு 80.43 வரையில் சரிந்து பெரும் சரிவை தொட்டு உள்ளது.

இதற்கு முன்பு ரூபாய் மதிப்பு அதிகப்படியாக 80.12 ரூபாய் வரையில் சரிந்திருந்த நிலையில் புதிய வட்டி விகித உயர்வின் மூலம் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 3வது வட்டி விகித உயர்வு மூலம் ஆசிய பங்குச்சந்தை முழுவதும் சரிவைச் சந்தித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வியாழக்கிழமை வர்த்தகத்தில் 58,973.07 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. ஆனால் அடுத்த சில நிமிடத்தில் உயர துவங்கிய காரணத்தால் சென்செக்ஸ் குறியீடு 210.82 புள்ளிகள் சரிந்து 59,251.19 புள்ளிகளை எட்டியுள்ளது.

நிஃப்டி குறியீடு 64.20 புள்ளிகள் சரிந்து 17,654.15 புள்ளிகளை எட்டியுள்ளது காலை வர்த்தகத்தில் அதிகப்படியான 17,580.40 வரையில் சரிந்துள்ளது. அமெரிக்காவின் வட்டி விகித உயர்வால் அமெரிக்கப் பங்குச்சந்தையும் 2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rupee Hits New All-Time, Indian stocks fall after US Fed’s rate hike

Rupee Hits New All-Time, Indian stocks fall after US Fed’s rate hike

Story first published: Thursday, September 22, 2022, 10:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.