வீட்டுக் கடன், வாகன கடன் வாங்க திட்டமா.. ஐசிஐசிஐ வங்கியின் சூப்பரான அறிவிப்ப பாருங்க!

மும்பை: பொதுவாக வங்கிகள் விழாக்கால பருவம் என்றாலே பல ஆஃபர்களை அள்ளி வழங்குவர். இந்த காலகட்டத்தில் வாகன விற்பனை நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் சலுகைகளை வழங்குவர்.

அந்த வகையில் ஐசிஐசிஐ வங்கி இன்று Festive Bonanza என்ற பெயரில் சலுகையினை அறிவித்துள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெரியளவில் பலன் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசிஎஸ் ஊழியர்களே ஆபீஸ் கிளம்புங்க.. வாரம் 3 நாள் கட்டாயம்.. புதிய உத்தரவு..!

கேஸ்பேக் சலுகை

கேஸ்பேக் சலுகை

ஐசிஐசிஐ வங்கியி-ன் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது இணைய வங்கி, நுகர்வோர் பைனான்ஸ், கார்லெஸ் இஎம்ஐ என பற்பலவற்றின் மூலம், இந்த ஃபெஸ்டிவல் போனான்ஸா சலுகையில் 25,000 ரூபாய் வரையில் கேஸ்பேக் சலுகையினை பெறலாம் என அறிவித்துள்ளது.

இஎம்ஐ-க்கும் சலுகை

இஎம்ஐ-க்கும் சலுகை

மேற்கண்ட இந்த கேஸ்பேக் சலுகையினை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் போதும் கிடைக்கிறது.

இது குறித்து ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குனர் ராகேஷ் ஜா, வாடிக்கையாளார்களுக்கு கேஸ்பேக், தள்ளுபடிகள் மற்றும் பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

 

பல பிராண்டுகளுடன் இணைந்து செயல்பாடு
 

பல பிராண்டுகளுடன் இணைந்து செயல்பாடு

நாட்டில் முன்னணி பிராண்டுகள், முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து நாங்கள் செயல்படுகிறோம். பண்டிகைக்கான சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். வீட்டுக் கடன், பேலன்ஸ் டிராஸ்பர், சொத்து மீதான கடன், தனி நபர் கடன், வாகனக் கடன், இருசக்கர வாகன கடன் உள்ளிட்ட பல சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தினையும் அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

வீட்டுக் கடனுக்கு என்ன?

வீட்டுக் கடனுக்கு என்ன?

இது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை காலத்தில் பல சலுகைகளை அளிக்கும்.

குறிப்பாக ப்ரீ அப்ரூவ்டு வீட்டுக் கடன் & ப்ரீ அப்ரூவ்டு பேலன்ஸ் டிரான்ஸ்பர் கடன்களுக்கு செயல்பாட்டு கட்டணமாக 1100 ரூபாய் மட்டுமே என அறிவித்துள்ளது. இதே வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் மற்றும் பேலன்ஸ் டிரான்ஸ்பர் கட்டணங்களுக்கு 50% செயல்பாட்டு கட்டணத்தில் தள்ளுபடி அறிவித்துள்ளது.

 

கார் கடன்

கார் கடன்

கார் கடன் வாடிக்கையாளர்களுக்கு ஆன் த ரோடு விலையில் 100% வரையில் கடனாக கிடைக்கும் என அறிவித்துள்ளது. இதே போல 8 வருடம் வரையிலான பயன்பாட்டு வாகனங்களுக்கும், அதன் மதிப்பில் 100% கடன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கஸ்டமர் பைனான்ஸ்

கஸ்டமர் பைனான்ஸ்

நோ காஸ்ட் இஎம்ஐ மூலம் ஆப்பிள், ஓன்பிளஸ், சாம்சங், சோனி, எல்ஜி, வோல்டாஸ் உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளில், நோ காஸ்ட் இஎம்ஐ குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், பஜாஜ் எலக்ட்ரானிக்ஸ் போன்ற முன்னணி சில்லறை விற்பனையாளர்களில் இந்த வசதி செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர் கடன்

தனி நபர் கடன்

தனி நபர் கடனில் முன் கூட்டியே செலுத்துவதற்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. (முன்னதாக 12 இஎம்ஐ-களுக்கு முன்னதாக முடித்தால் 3% ஆக கட்டணம் வசூலிக்கப்படும்)

டிராக்டர் கடன்

டிராக்டர் கடன்

வாடிக்கையாளர்கள் 6 ஆண்டுகள் வரையிலான டிராக்டர் கடனை பெறலாம். டிராக்டர் விலையில் 90% வரையில் கடனை பெறலாம்.

இருசக்கர வாகன கடன்

இருசக்கர வாகன கடன்

வாடிக்கையாளர்கள் ஆன் த ரோடு விலையில் 100% வரையில் கடனை பெறலாம். மாத தவனையாக குறைந்தபட்சம் 1000 ரூபாய்க்கு 30 ரூபாய் செலுத்தினால் போதுமானது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ICICI Bank has announced Festive Bonanza, Offers on home, auto loans, personal loan

ICICI Bank has announced Festive Bonanza, Offers on home, auto loans, personal loan/வீட்டுக் கடன், வாகன கடன் வாங்க திட்டமா.. ஐசிஐசிஐ வங்கியின் சூப்பரான அறிவிப்ப பாருங்க!

Story first published: Thursday, September 22, 2022, 17:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.