பாம்பே ஷேவிங் கம்பெனியின் நிறுவனர்-சிஇஓ சாந்தனு தேஷ்பாண்டே, இளம் வயதில் பணியில் சேர்பவர்கள் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் என்று குறைந்தது 4-5 வருடங்கள் பணியாற்றுங்கள் என்று தனது லிங்க்ட்இன் கணக்கில் பதிவிட்டார்.
Pristyn Care நிறுவனத்தின் இணை நிறுவனரான ஹர்சிமர்பீர் சிங் தனது லிங்கிடுஇன் கணக்கில் தனது நிறுவனத்தில் சரியான ஊழியர்களைச் சேர்வு செய்யப் பயன்படுத்தும் கொடுமையான இண்டர்வியூ ஹேக் பற்றிய பதிவுகள் இணையத்தில் டிரெண்டிங்க் ஆனது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீஷோ நிறுவனம் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க 11 நாள் விடுமுறை அறிவித்துள்ளது.
Meesho கொடுத்த அதிர்ச்சி.. 300 ஊழியர்கள் பணிநீக்கம்..!

பெங்களூர் – மீஷோ
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஈ-காமர்ஸ் நிறுவனமான மீஷோ, வரவிருக்கும் பண்டிகைக் காலத் தள்ளுபடி விற்பனை தணிந்தவுடன், ஊழியர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அனைத்து ஊழியர்களுக்கும் 11 நாள் விடுமுறை (Mental Health Break) அறிவித்துள்ளது.

மீஷோ 11 நாள் விடுமுறை
ஆன்லைன் ஃபேஷன் ஸ்டோர் ஆக அழைக்கப்படும் மீஷோ அனைத்து ஊழியர்களுக்கும் அக்டோபர் 22, 2022 முதல் நவம்பர் 1, 2022 வரையில் தங்களை “ரீசெட் செய்து ரீசார்ஜ்” செய்யும் வரையில் 11 நாள் விடுமுறை எடுக்க அனுமதிக்க உள்ளது. இது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இருக்கும் மீஷோ அறிவித்துள்ளது.

சஞ்சீவ் பர்ன்வால்
யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனமாக விளங்கும் மீஷோ-வின் நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான சஞ்சீவ் பர்ன்வால் தனது ட்விட்டரில், வொர்க் – லைப் பேலென்ஸ் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த முடிவை அறிவித்தார். இந்த நேரத்தில், ஊழியர்கள் தங்களுக்குப் பிடித்தவாறு நேரத்தை செலவிடலாம். மேலும் மென்டல் ஹெல்த் மிகவும் முக்கியம் எனழும் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் நலன்
பொதுவாக இந்திய நிறுவனங்கள் ஊழியர்கள் நலனில் அக்கறை செலுத்துவது இல்லை என்று கூறும் வேளையில், சில புதிய தலைமுறை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் ஊழியர்களுக்குப் பல சலுகைகளை அளிக்கின்றனர்.

உங்க நிறுவனம் எப்படி..?
ஆனால் இதேபோல் பாம்பே ஷேவிங் கம்பெனி நிறுவனர்-சிஇஓ சாந்தனு தேஷ்பாண்டே, Pristyn Care நிறுவனத்தின் இணை நிறுவனரான ஹர்சிமர்பீர் சிங் போன்றோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். சரி உங்க நிறுவனம் எப்படி..? மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க…
Bengaluru based Meesho gives 11 day holiday to employees as mental health break
Bengaluru-based Meesho gives 11 day holiday to employees as mental health break. Meesho Founder and chief technology officer of the unicorn startup Sanjeev Barnwal announced officially on twitter stressing the importance of work-life balance.