இந்தியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் அதேபோல் புதிதாக தொழில் தொடங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இதன் காரணமாக இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகி வருகிறது.
இந்த நிலையில் 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் எவ்வளவு பணக்காரர்கள் இருப்பார்கள் என்பது குறித்த ஆய்வு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
லட்சாதிபதிகள் ஆகும் பிளிப்கார்ட் ஊழியர்கள்..!

இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால், இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சூயிஸின் குளோபல் வெல்த் அறிக்கையின்படி இந்தியாவில் 2026 ஆம் ஆண்டிற்குள் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் லட்சாதிபதிகள்
2021ஆம் ஆண்டில், இந்தியாவில் 7.96 லட்சம் லட்சாதிபதிகள் இருந்தனர். இது 2026 ஆம் ஆண்டில் 105% அதிகரித்து அதாவது 16.32 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே காலகட்டத்தில், சீனாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 97% ஆகவும், அமெரிக்காவில் 13% ஆகவும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக பணக்காரர்கள் எண்ணிக்கை
மேலும் கிரெடிட் சூயிஸின் குளோபல் வெல்த் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பீடுகளின்படி, 2026ஆம் ஆண்டில் உலகளாவிய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 87 மில்லியனை தாண்டும் என்று கூறியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்ததை விட 25 மில்லியன் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடீஸ்வர்கள் பட்டியலில் முதலிடம்
உலக கோடீஸ்வரர் பட்டியலில் தற்போது அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்பதும், சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக கோடீஸ்வரர்களில் சுமார் 1% பேர் இந்தியாவில் உள்ள நிலையில், அமெரிக்காவில் 39% பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் – பிரிட்டன்
மேலும் அமெரிக்கா, சீனாவை அடுத்து ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருப்பினும், கொரியா, தைவான் உட்பட ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
How much Millionaires In India on 2026? Credit Suisse Report
How much Millionaires In India on 2026? Credit Suisse Report | இந்தியாவில் 2026ல் எத்தனை லட்சாதிபதிகள் இருப்பார்கள்? ஆய்வில் ஆச்சரிய தகவல்!