டெல்லி: அக்டோபர் மாதம் என்றாலே இது விழாக்கால பருவமாக உள்ளது. ஆக இந்த காலகட்டத்தில் வங்கிகளுக்கு அதிகளவிலான விடுமுறை இருக்கும்.
வரவிருக்கும் அக்டோபர் 2022ல் எத்தனை நாட்கள் விடுமுறை, குறிப்பாக தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வாருங்கள் பார்க்கலாம்.
அக்டோபர் மாதத்தில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி என களைகட்டும் விழாக் காலங்களில் அதிகளவிலான தேவையும் இருக்கும், ஆக விடுமுறை காலக்கட்டத்தினை தெரிந்து வைத்துக் கொள்வது மிக பயனுள்ளதாகவும் இருக்கும்.
ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 15 நாள் விடுமுறையா? முழு விபரங்கள்!
21 நாட்கள் விடுமுறை
நீங்கள் அடிக்கடி வங்கி பரிவர்தனை செய்யும் ஒரு வாடிக்கையாளராக இருப்பின் நிச்சயம் உங்களுக்கு இது பயனுள்ளதாகவே இருக்கும். ஏனெனில் அக்டோபர் மாதத்தில் மொத்தம் பொது விடுமுறை வார முறையும் சேர்த்து 21 நாட்கள் விடுமுறையாகும். ஆக இந்த காலகட்டத்தில் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம். ஆக முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
மொத்த விடுமுறை
மாதத்தின் தொடக்கத்திலேயே காந்தி ஜெயந்தியுடன் விடுமுறை தொடங்குகிறது.
அக்டோபர் 1 – சனிக்கிழமை – வங்கி அரையாண்டு கணக்கு முடிப்பு
அக்டோபர் 2 – ஞாயிற்றுகிழமை – காந்தி ஜெயந்தி
அக்டோபர் 3 – திங்கட்கிழமை – துர்கா பூஜை (மகா அஷ்டமி)
அக்டோபர் 4 – செவ்வாய்கிழமை – துர்கா பூஜை /தசரா, ஆயுதபூஜை, ஸ்ரீ மந்தா சங்கர் தேவா ஜன்மாஸ்தேவ்
அக்டோபர் 5 – புதன் கிழமை – துர்கா பூஜை/தசரா (விஜய தசமி. ஸ்ரீ மந்தா சங்கர் தேவா ஜன்மாஸ்தேவ்
அக்டோபர் 6 – வியாழக்கிழமை – துர்கா பூஜை (தாஸ்ஹெயின்)
அக்டோபர் 7 – வெள்ளி கிழமை – துர்கா பூஜை (தாஸ்ஹெயின்)
அக்டோபர் 8 – இரண்டாவது சனிக்கிழமை/ மிலாது நபி
அக்டோபர் 9 – ஞாயிற்று கிழமை
அக்டோபர் 13 – வியாழக்கிழமை – கர்வா சவுத்
அக்டோபர் 14 – வெள்ளிக் கிழமை – மிலாது நபி
அக்டோபர் 16 – ஞாயிற்று கிழமை
அக்டோபர் 18 – செவ்வாய் கிழமை – காதி பிஹு
அக்டோபர் 22 – நான்காவது சனிக்கிழமை
அக்டோபர் 23 – ஞாயிற்றுகிழமை –
அக்டோபர் 24 -திங்கட்கிழமை – காளி பூஜை/ தீபாவளி/ தீபாவளி (லட்சுமி பூஜா/ நரகா சதுர்தசி
அக்டோபர் 25 – செவ்வாய் கிழமை -லட்சுமி பூஜா/ தீபாவளி- கோவர்த்தன் பூஜா
அக்டோபர் 26 -புதன் கிழமை – கோவர்த்தன் பூஜா/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு/ பாய் பிஜ்/ பாய் துஜ்
அக்டோபர் 27 – வியாழக்கிழமை – பாய்தூஜ்/சித்ராகுப்த் ஜெயந்தி/ லட்சுமி பூஜை/ தீபாவளி/ நிங்கோல் சக்குபா
அக்டோபர் 30 – ஞாயிற்றுகிழமை
அக்டோபர் 31 – திங்கட்கிழமை – சர்தார் வல்லாபாய் படேல் பிறந்த நாள்/ சூர்யா பாஸ்தி தலா சந்த்/ சாத் பூஜை
தமிழகத்தில் எத்தனை நாட்கள்?
அக்டோபர் 2 – ஞாயிற்றுகிழமை – காந்தி ஜெயந்தி
அக்டோபர் 4 – செவ்வாய்கிழமை – துர்கா பூஜை /தசரா, ஆயுதபூஜை, ஸ்ரீ மந்தா சங்கர் தேவா ஜன்மாஸ்தேவ்
அக்டோபர் 5 – புதன் கிழமை – துர்கா பூஜை/தசரா (விஜய தசமி. ஸ்ரீ மந்தா சங்கர் தேவா ஜன்மாஸ்தேவ்
அக்டோபர் 8 – இரண்டாவது சனிக்கிழமை/ மிலாது நபி
அக்டோபர் 9 – ஞாயிற்று கிழமை
அக்டோபர் 22 – நான்காவது சனிக்கிழமை
அக்டோபர் 23 – ஞாயிற்றுகிழமை –
அக்டோபர் 24 – திங்கட்கிழமை – காளி பூஜை/ தீபாவளி/ தீபாவளி (லட்சுமி பூஜா/ நரகா சதுர்தசி
திட்டமிட்டு செயல்படலாம்
மேற்கண்ட விடுமுறை கால கட்டத்தினை தெரிந்து வைத்துக் கொண்டால், அதற்கேற்ப மக்கள் செயல்படலாம். ஏனெனில் தொடர்ச்சியான விடுமுறைகளுக்கு மத்தியில், அந்த சமயத்தில் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் பயனாளர்கள் முன் எச்சரிக்கையாக உதவும்.
மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம்
கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட, இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராக இருக்கலாம். குறிப்பாக பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன் கூட்டியே செலுத்தி விடலாம்.
மேற்கண்ட விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் சற்று வேறுபடுவதால், மக்கள் அதற்கேற்ப செயல்படுவது நல்லது. வங்கிகள் பொதுவாக நம் பணத்தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அம்சமாகும். ஆக முன்கூட்டியே திட்டமிட்டு, செயல்பட்டால் தேவையற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம்.
bank holidays in October 2022: Here’s the full list of bank holidays in tamil nadu
bank holidays in October 2022: Here’s the full list of bank holidays in tamil nadu/