மாணவர்கள் கலை பண்பாட்டு செயல்பாடுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முதன்முறையாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் வாரத்துக்கு 2 பாடவேளைகளில் இணைக்கப்பட்டுள்ளன.
இசை, நடனம், காட்சிக் கலை, நாடகம், நாட்டுப்புறக் கலை உள்ளிட்ட கலை, பண்பாட்டு செயல்பாடுகள் இதில் அடக்கம். இதில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கலந்துகொள்ள வேண்டும். கலை, பண்பாட்டு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இந்தத் திட்டத்துக்கு அருகில் உள்ள கலைஞர்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.