மயிலாடுதுறை: வரதட்சணை கொடுமை உச்சக்கட்டத்துக்கு சென்ற நிலையில், இளம்பெண் செய்த காரியம் மயிலாடுதுறையி ஆச்சரியத்தை கிளப்பி விட்டு வருகிறது.
பெண்கள் இன்று அனைத்து துறையிலும் முன்னேறி வருகிறார்கள்.. தங்கள் சொந்த காலில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள்..
கல்வி, பொருளாதாரம் போன்ற விஷயங்களில், முன்பைவிட பெண்களின் நிலை பலமடங்கு மேம்பட்டிருக்கிறது… மறுப்பதற்கில்லை.. ஆனாலும், காலம் மாறினாலும், வரதட்சணைக் கொடுமை மட்டும் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை.
அவ்வளவு ஏன், கல்வி அறிவில் மிகைபெற்ற மாநிலமான கேரளாவில்கூட, இந்த வரதட்சணை கொடுமை தாண்டவமானடியதையும், அதனால், அடுத்தடுத்த 3 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டதையும் கண்டு, இந்த நாடே அதிர்ந்தது..
கேரளாவா?
3 பேருமே 22 முதல் 24 வயதுடையவர்கள்.. 3 பேருமே கல்லூரி படிப்பை படித்து கொண்டிருந்தவர்கள்.. 3 பேருக்குமே ஒரே மாதிரியான வரதட்சணை கொடுமை தரப்பட்டுள்ளது.. 3 பேருமே மர்மமான முறையிலும் இறந்துவிட்டனர்.. இது தற்கொலையா, கொலையா? என்ற வழக்கு நடக்கிறது என்றாலும், கேரளாவிலா இப்படியெல்லாம் நடந்தது என்று பினராயின் அரசுக்கே கெட்ட பெயர் வரும் அளவுக்கு இந்த வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துவிட்டன.
வடிவங்கள்
நம்ம ஊரும் இதற்கெல்லாம் விதிவிலக்கு இல்லை.. வரதட்சணையின் அளவுகளும், வடிவங்களும் மாறி உள்ளதே தவிர, வரதட்சணையின் தீவிரம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.. எத்தனை பெண்கள் மரணத்தை தழுவினாலும், ஒருசில துணிச்சலான பெண்கள் சட்டரீதியாக அணுகி இதற்கு தீர்வு காண்கிறார்கள்.. ஆனால், இங்கே ஒரு பெண், வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார் பாருங்களேன்..
பிரவீனா
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் தெற்கு வெளியை சேர்ந்தவர் நடராஜன்.. 32 வயதாகிறது.. சென்னையில் வேலை பார்த்து வருகிறார். திருவாரூர் மாவட்டம் பில்லூர் கிராமத்தை சேர்ந்த பிரவீனாவுடன் இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்துள்ளது.. பிரவீனாவுக்கு 24 பவுன் நகை, பைக், ரூ.3 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர்.. கல்யாணம் ஆகி 3 மாதம் 2 பேரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்துள்ளனர்.. அதற்கு பிறகு, வரதட்சணை கொடுமை ஆரம்பமாகி உள்ளது…
அண்ணி
நடராஜன் மனைவியை இது தொடர்பாக டார்ச்சர் செய்து வந்துள்ளார்.. மனைவியை தன்னுடன் வெளியில் எங்கும் அழைத்து செல்லவும் மாட்டாராம்.. இதைதவிர, நடராஜன் வீட்டில் இல்லாதபோது, அவரது தம்பி சதீஷ், அண்ணி என்றும் பாராமல் பிரவீனாவுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது… இதை பற்றி நடராஜனிடம் பலமுறை பிரவீனா சொல்லியும், அவர் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையாம்.. வரதட்சணை பிரச்சனை அதிகமாகிவிடவும், ஒருகட்டத்தில் பிரவீனாவை, வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார்கள்..
வாசலிலேயே
கதவையும் இழுத்து பூட்டிவிட்டு, பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொத்த குடும்பமும் சென்றுவிட்டது.. ஒருதவறும் செய்யாமல், நாம் ஏன் வீட்டை விட்டு போக வேண்டும் என்று நினைத்த பிரவீனா, கணவர் வீட்டை விட்டு வெளியேறவே இல்லையாம்.. என்ன ஆனாலும் சரி, அவர்கள் வருமவரை வாசற்படியிலேயே உட்கார்ந்துவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து, அங்கேயே தங்கிவிட்டார்.. இப்படியே 20 நாட்களாக கணவர் வீட்டின் முன்பு பிரவீனா காத்திருந்தார்.
கடப்பாறை
அந்த ஊர் முக்கியஸ்தர்களிடம் பிரச்சனையை சொல்லியும் யாரும், இதை கண்டுகொள்ளவில்லையாம்.. இதனால் அப்பகுதி மக்களுடன் வந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜிடம் புகார் மனு அளித்தார்.. இறுதியில், பொறுமையையிழந்த பிரவீனா, பொதுமக்கள் உதவியுடன் நேற்றிரவு, கடப்பாரையை கொண்டு வந்து, வீட்டின் பூட்டை உடைத்து, மாமனார் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தார்… இரவு முழுவதும் அந்த வீட்டிற்குள்ளேயே தங்கி இருந்தார்… இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. வீட்டை பூட்டிக் கொண்டு போனவர்களை இன்னும் காணோம்.. அவர்கள் வந்தால்தான் அடுத்து என்ன என்பது தெரியவரும்..!