மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமையினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள அனைத்து வழிபாட்டு தளங்களுக்கும் நீண்ட கால நிவாரணமாக சூரிய சக்தி மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துதற்கும் வழங்க கூடிய நிவாரணம் தொடர்பில் கண்டறிவதற்காகவும் ஜனாதிபதியின் ஆலோசனை பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்க்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இதுதொடர்பிலான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கு விரைவாக செயற்படுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கமைவாக விரைவில் ஏதேனும் நீண்ட கால நிவாரணம் வழிபாட்டு தளங்களுக்கு கிடைக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் திந்தக கருணாரத்ன அவர்களும் கலந்து கொண்டார்.