அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி

வெள்ளியன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது. முதல் முறையாக ஒரு டாலருக்கு நிகராக 39 காசுகள் சரிந்து இந்திய ரூபாயின் மதிப்பு 81-ஐத் தாண்டியது. இது இந்திய நாணயத்தின் மிகவும் பலவீனமான அளவாகும். புதன்கிழமை அமெரிக்க பெடரல் ரிசர்வ் பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியது முதல் இந்திய ரூபாயின் மதிப்பு அழுத்தத்தில் உள்ளது. விண்ணைத் தொடும் பணவீக்கத்திற்கு மத்தியில் இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் வீழிச்சியடையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். 

முன்னதாக வியாழன் அன்று, மத்திய வங்கி கொள்கை அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க டாலர் குறியீடு 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் ரூபாய் 80.86 என்ற அளவில் முடிந்தது.

அமெரிக்க ட்ரெஷரி ஈல்ட்

அமெரிக்க கருவூல வருவாயின் (அமெரிக்க ட்ரெஷரி ஈல்ட்) அதிகரிப்பு காரணமாக 10 ஆண்டு பத்திர ஈவுத்தொகை 6 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 2 மாத உயர்வான 3.719 சதவீதமாக இருந்தது. அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் மாதத்திற்கான நாணயக் கொள்கையில் வட்டி விகிதங்களை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதுமட்டுமின்றி இன்னும் பல கண்டிப்பான அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. இந்த அறிவுறுத்தல்கள் அமெரிக்க டாலருக்கு ஆதரவாக இருக்கும். இந்திய சந்தையிலும் நிலையற்ற தன்மை இருப்பதால், டாலரின் வலுவான நிலை காரணமாக இந்திய நாணயத்தில் இன்னும் வீழ்ச்சி ஏற்படலாம். 

இந்த ஆண்டு 8.5% வீழ்ச்சி

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரு டாலருக்கு 81.03 ஆக துவங்கி இதுவரை இல்லாத அளவான 81.13 டாலரை தொட்டது. முன்னதாக வியாழன் அன்று, ஒரு டாலருக்கு ரூபாயின் மதிப்பு 80.87 ஆக இருந்தது. அதாவது, இன்று அதில் சுமார் 0.35 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 8 சந்தை அமர்வுகளில் ரூபாய் மதிப்பு சரிந்த 7வது அமர்வு இதுவாகும். இந்த ஆண்டு இதுவரை, ரூபாயின் மதிப்பு சுமார் 8.48 சதவீதம் குறைந்துள்ளது.

ரூபாய் வீழ்ச்சி தொடரும்

மத்திய ரிசர்வ் வங்கியின் ஆக்ரோஷமான அணுகுமுறையால் ரூபாய் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளதாக இந்திய பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். ரூபாயின் வீழ்ச்சியை தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி கண்டிப்பாக சந்தை செயல்பாடுகளில் தலையிடும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ரூபாய் மதிப்பில் மேலும் சரிவு இருக்கும் என்றே தெரிகிறது. 

தற்போதைய சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியின் தலையீடு ஒரு தற்காலிக ஆதரவாகவே இருக்கும். இது இந்திய நாணயத்தின் சரிவை முழுமையாக மாற்றாது என்றும் சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.