இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண்கள் இரட்டைக்கொலை: பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகின

இங்கிலாந்தில் கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளியினர்களாகிய தாய் மற்றும் மகள் குறித்த தகவல்கள் பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளன.

கொலை செய்தவர் என கருதப்படும் நபரைக் குறித்த விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.

இங்கிலாந்தில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியினர்களாகிய தாய் மற்றும் மகள் குறித்த சில புதிய தகவல்கள் பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளன.

இம்மாதம் (செப்டம்பர்) 8ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Great Waldingfield என்னும் இடத்தில், வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என பொலிசாருக்குத் தகவலளிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் அங்கு விரைந்தபோது, ஒரு தாயும் மகளும் உயிரிழந்து கிடந்துள்ளனர். அதே வீட்டில் காயங்களுடன் ஒரு ஆண் சிக்கியுள்ளார். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண்கள் இரட்டைக்கொலை: பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகின | Indian Origin Women In The Uk Twins

Image: Facebook / East Anglia News Service

தற்போது உயிரிழந்த பெண்கள் குறித்த விவரங்கள்வெளியாகியுள்ளன, கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பெயர் Jillu Nash (44). அவரது பெற்றோர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். மற்றொரு பெண், Louise Nash (12), அவர் Jilluவின் மகள். அவர் ஆட்டிஸக் குறைபாடு கொண்டவர்.

பிரேதப் பரிசோதனையில், Jillu கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டதும், Louise வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண்கள் இரட்டைக்கொலை: பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகின | Indian Origin Women In The Uk Twins

Image: Facebook / East Anglia News Service

கொலை செய்தவர் என பொலிசார் கருதும் 46 வயது நபரைக் குறித்த விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.

தொடர்ந்து இந்த இரட்டைக் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் யாருக்காவது ஏதாவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
 
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண்கள் இரட்டைக்கொலை: பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகின | Indian Origin Women In The Uk Twins

Image: East Anglia News Service

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண்கள் இரட்டைக்கொலை: பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகின | Indian Origin Women In The Uk Twins

Picture: Kaia Nicholl

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண்கள் இரட்டைக்கொலை: பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகின | Indian Origin Women In The Uk Twins

Image: East Anglia News Service

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.