மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், சரிவைக் கண்டது.
ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 90 காசுகள் குறைந்து, 80.86 ரூபாயாக சரிந்தது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பை அடுத்து, ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவைக் கண்டது.நேற்று, சந்தை துவக்கத்தில் 80.27 ரூபாயாக இருந்த மதிப்பு, நாளின் இடையே 80.95 ரூபாய் எனும் அளவுக்கு சரிவைக் கண்டு, இறுதியில் 80.86 ரூபாயில் நிலைபெற்றது.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பு, அன்னிய சந்தைகளில் அமெரிக்க டாலர் வலுவடைந்தது, உள்நாட்டு பங்கு வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவற்றில் பெரிய ஏற்றமில்லாதது ஆகியவை காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைக் கண்டிருப்பதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியை அடுத்து, பேங்க் ஆப் இங்கிலாந்தும் வட்டியை உயர்த்தி உள்ளது. பேங்க் ஆப் ஜப்பானும் வட்டியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement