“இறைச்சி உண்ணும் ஆண்கள் உறவு கொள்ளத் தடை விதிக்க வேண்டும்''- சர்ச்சையைக் கிளப்பும் பீட்டா!

தொட்டால் ஷாக் அடிக்கும் விவாதங்களில் சைவம், அசைவம் இந்த இரண்டு வார்த்தைகளும் அடங்கும். உணவை உணவாகப் பார்க்காமல் அவற்றில் அரசியல், மதம், சாதி என அனைத்தையும் கலக்கும்போது தான் இத்தகைய பிரச்னைகள் உருவெடுக்கின்றன.

சைவம் உண்பவர்கள் பற்றியும், அசைவம் உண்பவர்கள் பற்றியும் அவ்வப்போது பலர் தங்களின் கருத்துகளைச் சொல்லி, அதனால் விவாதங்கள் நீள்வதுண்டு.

இந்நிலையில் “இறைச்சி உண்ணும் ஆண்கள் உடலுறவு கொள்ளத் தடை விதிக்க வேண்டும்” என விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா (People for the Ethical Treatment of Animals – PETA) தெரிவித்துள்ளது.

இந்த அமைப்போடு தொடர்புடைய ஜெர்மன் பிரிவு ஒன்று பி.எல்.ஓ.எஸ் ஒன் (PLOS One) என்ற அறிவியல் இதழின் ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, பெண்களை ஒப்பிடுகையில் ஆண்களே அதிக இறைச்சி உண்பதாகவும், இதனால் 41 சதவிகித பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு ஆண்களே காரணம் என்றும் கூறியுள்ளது.

இறைச்சியை உண்ணும் அனைத்து ஆண்களுக்கும் பாலியல் உறவு கொள்ளத் தடை விதிக்க வேண்டும். உலகைக் காக்க இறைச்சி உண்ணும் ஆண்களிடம் உடலுறவை நிராகரித்து, பாலியல் வேலைநிறுத்தத்தில் பெண்கள் ஈடுபட வேண்டும்.

இறைச்சி உண்ணும் ஆண்கள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும், நடத்தையையும் வெளிப்படுத்துகிறார்கள். இது சமூகத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். பூமியின் அழிவுக்கு வழிவகுக்கும்.

நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மை, காலநிலைக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் உள்ளதால், ஆண்களுக்கு 41 சதவிகித கடுமையான இறைச்சி வரி விதிப்பது பொருத்தமானதாக இருக்கும் எனவும் பீட்டா ஜெர்மனியின் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.