சீனா தனது ஆலைகளில் பல ரோபோக்களை கடந்த ஆண்டே, உலகின் மற்ற நாடுகளை போலவே பணிக்கு அமர்த்தியது. உழைக்கும் வர்க்கத்தினரின் பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது அதனை துரிதப்படுத்த தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக சீனா இறக்குமதி செய்துள்ள ரோபோக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டினை காட்டிலும் 45% அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சர்வதேச அளவில் முக்கிய உற்பத்தி மையமாக திகழும் சீனா, தற்போது கொரோனாவின் மெதுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது.
டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!
உற்பத்தியினை பெருக்க திட்டம்
இதற்கிடையில் உற்பத்தியினை மேம்படுத்த சீனா முயற்சி எடுத்து வருகின்றது. ஏற்கனவே உலகின் தொழிற்சாலையாக விளங்கும் சீனா, இதன் மூலம் மேற்கோண்டு உற்பத்தியினை பெருக்க முடியும் என திட்டமிடுகிறது.
ஆட்டோமேஷன் குறைவு தான்
உலகின் முன்னணி உற்பத்தியாளராக இருந்தாலும், சீனாவின் ஆட்டோமேஷன் வளர்ச்சி என்பது குறைவாகும். உலகின் இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா போன்ற உற்பத்தியாளர்களை விட பின் தங்கியுள்ளது.
சராசரி உற்பத்தி
சீனாவின் இந்த முடிவினால் சீனாவின் சராசரி உற்பத்தி விகிதமானது அதிகரிக்கும் எனலாம். கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவின் உற்பத்தி விகிதமானது சரியத் தொடங்கியுள்ளது. இது கடந்த 2000 – 2010 காலகட்டங்களில் வருடத்திற்கு சராசரியாக 9% ஆக இருந்த வளர்ச்சி விகிதமானது, அதன் பின்னர் சரியத் தொடங்கியுள்ளது. தற்போது வரையில் சரிவிலேயே காணப்படுகிறது.
புதிய ரோபோக்கள் நிறுவல்
இந்த நிலையில் தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகளை விட சீனா கிட்டதட்ட 2 மடங்கு புதிய ரோபோக்களை நிறுவியுள்ளதாக IFR தரவு காட்டுகிறது. இது எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக நாடுகளுடன் போட்டியிட சீனாவுக்கு உதவலாம்.
வளர்ச்சி மேம்படலாம்
சீனாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், கொரோனாவும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரையிலும் கூட சீனாவின் சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் இருந்து வருகின்றது. இதனால் இன்னும் கூட சில பகுதிகளில் ஜீரோ கோவிட் பாலிசி அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உற்பத்தி பாதிகப்படலாம் என்றாலும், புதிய புதிய தொழில் நுட்பங்கள் அதன் வளர்ச்சியினை மேம்படுத்த உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
china updates: Increasing number of robots in Chinese factories
Increasing number of robots in Chinese factories/உலக நாடுகளை விஞ்ச சீனாவின் பலே திட்டம்.. எப்படி தெரியுமா..?