ஒன்றிய அரசு திட்டங்கள் கீழ் எளிமையாக துவங்கக்கூடிய 6 சிறு தொழில்கள்..!

இந்தியாவில் சிறு தொழில் தொடங்க பல்வேறு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து இருந்தாலும் அதனை எளிமையாகச் சாமானியர்களால் பெற முடியாது.

தொழில் தொடங்க கடன் திட்டங்கள் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், கடன் வழங்கும் நிறுவனங்கள் ஏற்கனவே செய்து வரும் தொழில்களுக்குத் தான் பெரும்பாலும் கடன்களை வழங்குகின்றன.

எனவே ஒன்றிய அரசின் கடன் திட்டங்களான பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத அறக்கட்டளை நிதி, ZED சான்றிதழ் திட்டத்தில் MSMEகளுக்கு கடன் உதவி, தொழில்நுட்ப மேம்படுத்தலுக்கான கடன் இணைக்கப்பட்ட மூலதன மானியம் போன்றவற்றின் கீழ் பின்வரும் சிறு தொழில்களுக்கு எளிமையாகக் கடன் பெறலாம் என கூறுகின்றனர்.

டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!

அப்பளம் வியாபாரம்

அப்பளம் வியாபாரம்

நீங்கள் அப்பளம் செய்யும் தொழில் தொடங்கலாம். இந்த சிறு தொழிலைத் தொடங்க முதலீடாக 2 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். பேரிய இயந்திரங்களுடன் தொழில் செய்ய விரும்பினால் அதற்கு 8.18 லட்சம் வரை கடன் பெற முடியும். இது மட்டுமின்றி, இதற்கு, அரசின் தொழில்முனைவோர் ஆதரவு திட்டத்தின் கீழ், 1.91 லட்சம் ரூபாய் மானியமும் கிடைக்கும்.

சிறிய உதிர் பாகங்கள் வணிகம்

சிறிய உதிர் பாகங்கள் வணிகம்

இன்று சிறிய உதிரிப்பாகங்கள் வணிகம் மிகவும் வெற்றிகரமாக உள்ளது. நட்டு, போல்ட், வாஷர்கள் ஆகியவை அடங்கும். இந்த பாகங்களின் உற்பத்தி லேத்து பட்ட்ரை ஒன்றை நீங்கள் அமைக்கலாம். 1.88 லட்சத்தில் இந்தப் பணியைத் தொடங்கலாம். இந்த வேலைக்கு நீங்கள் இன்னும் அதிக கடன் பெறலாம். மேலும், உங்கள் ஆண்டு லாபம் ரூ.2 லட்சம் வரை பெறலாம் என கூறுகின்றனர்.

மசாலா பொடி வியாபாரம்
 

மசாலா பொடி வியாபாரம்

கறி மற்றும் அரிசி தூள் தேவை மிகவும் அதிகமாகிவிட்டது. இந்த தொழிலைத் தொடங்க ஆரம்ப முதலீடாக ரூ.1.66 லட்சம் செய்ய வேண்டும். இந்தத் தொழிலைத் தொடங்க உங்களுக்கு எந்த அனுபவமும் தேவையில்லை. வங்கிகளும் எளிதாகக் கடன் வழங்கும்.

ஃபர்னிச்சர் வணிகம்

ஃபர்னிச்சர் வணிகம்

நீங்கள் ஒரு ஃபர்னிச்சர் தொழிலை தொடங்கலாம். ஆரம்ப முதலீடாக சுமார் 1.85 லட்சம் ரூபாய் தேவைப்படும். அதே சமயம் முத்ரா திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக வங்கியில் நிறையக் கடன் பெறலாம். இந்த தொழில் ஆரம்பத்திலிருந்தே லாபம் அளிக்கும்.

டிஃபன் கடை

டிஃபன் கடை

இந்தியாவில் பெருநகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக டிஃபன் கடை உள்ளது. இதற்கு லட்சம் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியம் கூற இல்லை. முதலில் வீட்டிலிருந்த படியே தொடங்கி பின்னர், தனி கடையாகவும் டிஃபன் கடையை மாற்ற முடியும்.

பேக்கரி

பேக்கரி

பேக்கரி உணவு பொருட்களுக்கு ஒவ்வொரு நாளும் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறைந்த முதலீட்டில் டிஃபன் கடன் பொன்று வீட்டிலிருந்தே இதையும் தொடங்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

6 Small Business Ideas To Start Using Union Govt Loan Schemes

6 Small Business Ideas To Start Using Union Govt Loan Schemes | ஒன்றிய அரசின் திட்டங்கள் கீழ் எளிமையாகப் பெறக் கூடிய 6 சிறு தொழில்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.