காஷ்மீரில் ஜனநாயகத்தை அழித்து விட்டது இந்தியா:ஐ.நா.வில் பாக்.பிரதமர் பேச்சு| Dinamalar

நியூயார்க்: காஷ்மீரில் ஜனநாயகத்தை அழித்து விட்டது இந்தியா என ஐ.நா.வில் பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசினார்.

ஐ.நா., பொது சபை 77வது கூட்டம் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது, கடந்த 1947-ம் ஆண்டு முதல் இந்தியாவுடன் 3 போர்களை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.

இதனால் இரு தரப்பிலும் வறுமை, வேலையின்மை மட்டுமே அதிகரித்துள்ளது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் ஜனநாயகத்தை இந்தியா அழித்துவிட்டது. நம் அண்டை நாடான இந்தியா ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்கி நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.