கோவை: கோவையில் அடுத்தடுத்த பெட்ரோல் குண்டுவீச்சை தொடர்ந்து முழு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவையில் அனைத்து சாலைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடைபெறுகிறது என அவர் கூறியுள்ளார்.