சட்ட விரோத போர் தொடுத்த 'ரஷியாவை தண்டிக்க வேண்டும்' – ஐ.நா.வில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட வீடியோ உரை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அந்த பேச்சில் அவர் வலியுறுத்திய முக்கிய விஷயங்கள்:-

* உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக ரஷியாவை தண்டிக்க வேண்டும்.

* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடு பதவியை பறிக்க வேண்டும்.

* சிறப்பு போர் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும், ரஷியா நடத்தியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

* ரஷியாவின் சட்ட விரோதப் போரால் பேரழிவு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

* உக்ரைன் நாட்டுக்கு புதிய பாதுகாப்பு உத்தரவாதங்கள் தர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.