வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சுற்றுச்சூழல் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நமது இளைஞர்களுக்கு கற்பிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குஜராத்தின் ஏக்தா நகரில் நடக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுக்கான தேசிய மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த வழிமுறைகளை கற்றுக்கொண்டு, இந்தியாவின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
உள்நாட்டு பொருளாதாரம் என்பது, நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் ஒரு அங்கமாக பல ஆண்டுகள் திகழ்ந்தது. அந்த நடைமுறையை மீண்டும் கொண்டு வந்து நமது அன்றாட வாழ்க்கையில் புகுத்த வேண்டும். பல ஆண்டுகளாக சிங்கங்கள், புலிகள், யானைகள், காண்டாமிருகங்கள், சிறுத்தைகள் ஆகியன தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில், சிவிங்கிகளுக்கு கிடைத்த உற்சாக வரவேற்பானது, இந்தியாவின் தனித்துவமான விருந்தோம்பலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
தேசிய கல்விக்கொள்கை மூலம், அனுபவரீதியான கற்பித்தலை ஒருங்கிணைப்பதுடன், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நமது இளைஞர்களுக்கு கற்பிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement