அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது நடப்பு ஆண்டில் 82 ஆக வீழ்ச்சி காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சர்வதேச அளவில் நிலவி வரும் நிலையில் மந்த நிலைக்கு மத்தியில், பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பணவீக்கத்தினை கட்டுபடுத்த, அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது மேற்கோண்டு வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு டாலரின் மதிப்பினை ஊக்கப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 ஸ்டார் ஹோட்டலுக்கு இணையாக அறை கட்டணம்.. பெரிய மருத்துவமனைகளை விளாசும் CCI..!

வர்த்தக பற்றாக்குறை
இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்து வருகின்றது. அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது மேற்கொண்டு கச்சா எண்ணெய்-க்கான அதிக செலவினை செய்யத் தூண்டலாம். இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூபாயின் மதிப்பில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னிய செலவாணி சரிவு
எனினும் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து வருகின்றது. இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா ரூபாய் மதிப்பினை சரியாக வைத்துக் கொள்ள அதிகம் போராட வேண்டியதில்லை. ஏனெனில் வளரும் நாடுகளின் நாணய மதிப்பானது மேற்கொண்டு சரியலாம். இன்று இந்திய ரூபாயின் மதிப்பானது டாலருக்கு எதிராக இன்று 81.26 ஆக சரிவினைக் கண்டது.

பலத்த சரிவு
நடப்பு மாதத்தில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பானது 1.8% குறைந்துள்ளது. இது கடந்த ஜூலை – செப்டம்பரில் 2.4% சரிவினைக் கண்டுள்ளது. இதே ஜனவரியில் இருந்து 8.1% சரிவினை கண்டுள்ளது. எனினும் இந்த காலகட்டத்தில் சீனாவின் யுவான் மற்றும் கொரியா நாணய மதிப்பானது முறையே 10.43% அல்லது 15.63% சரிவினைக் கண்டுள்ளது.

சரியலாம்
ரூபாயின் மதிப்பு மேற்கொண்டு 82 ரூபாய் என்ற லெவலுக்கு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவும், சீனாவும் மந்த நிலையை எதிர்கொள்ளும் மூன்று பெரிய நாடுகளில் இரண்டு நாடுகளாக உள்ளன. இந்தியா உள்பட பல நாடுகளும் மேற்கண்ட நாடுகளுடன் வலுவான வணிக தொடர்பில் உள்ளன. எனினும் பெரும் பொருளாதார நாட்டின் மந்த நிலை, இந்தியாவில் தாக்கத்தினை பெரியளவில் ஏற்படுத்தாது என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Indian Rupee may plunge to 82 to a dollar this year
Indian Rupee may plunge to 82 to a dollar this year/டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.. 82 ஆக வீழ்ச்சி காணலாம்..!