டில்லி எய்ம்ஸ் இயக்குநராக ஸ்ரீநிவாஸ் நியமனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஹைதராபாத்தில் உள்ள இஸ்ஐ மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியின் இயக்குநரான ஸ்ரீநிவாஸ்,டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநராக இருந்த ரன்தீப் குலேரியாவின் பதவிக்காலம் கடந்த மார்ச் 25 அன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. இது செப்., 23 (இன்றுடன்) நிறைவு பெறுகிறது.

latest tamil news

இதனையடுத்து, அந்த பதவிக்கு ஸ்ரீநிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை, நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கடந்த 9 ம் தேதி பிறப்பித்துள்ளது. அவர் பதவியேற்றது முதல் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை (அதில் எது முதலாவது வருகிறதோ அதுவரை) பதவியில் இருப்பார் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016 ல் ஹைதராபாத் இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியின் இயக்குநராக நியமிக்கும் முன்னர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் நல பேராசிரியராக ஸ்ரீநிவாஸ் பணியாற்றி வந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.