சென்னை : இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம்.
சாதாரண கிராமத்து இளைஞன் சூழ்நிலை காரணமாக எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகியுள்ளது.
சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
வெந்து தணிந்தது காடு படம்
நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சிறந்த விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் குவித்துள்ளது வெந்து தணிந்தது காடு படம். இந்தப் படத்தின் மேக்கிங் மற்றும் திரைக்கதை ரசிகர்களை மிரட்டியது. தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
அடுத்தப் படத்துக்கு தயார்
மாநாடு படத்தைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்துள்ள நிலையில், இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைகொடுத்துள்ளது. படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ள நிலையில், சிம்புவின் அடுத்தப்படமான பத்து தல படத்தையும் அவரே தயாரித்து வருகிறார். இந்தப் படம் டிசம்பரில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி 67 குறித்து கௌதம் மேனன்
இந்தப் படத்தின் பிரமோஷன்கள் படக்குழு ஈடுபட்ட நிலையில், கௌதம் மேனன் படம் குறித்தும் சிம்பு குறித்தும் பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டார். தொடர்ந்து தளபதி 67 படத்தில் அவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
தவறிய வாய்ப்பு
அந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்திலேயே தான் இணையவிருந்ததாகவும் தவிர்க்க முடியாத காரணங்களால் அது நடக்காமல் போனதாகவும் இதனிடையே லோகேஷ் கனகராஜ் தற்போது தனது அடுத்தப் படத்தில் நடிக்க கேட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
தளபதி 67 படத்தில் கௌதம் மேனன்
இதனிடையே வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி தற்போது கௌதம் மேனன் பிரீயாகியுள்ள நிலையில், விஜய்யுடன் தான் தளபதி 67 படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளதாகவும் இதற்காக தான் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
வில்லன் வேடத்தில் கௌதம் மேனன்?
தளபதி 67 படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடிக்கவுள்ள நிலையில் அவருக்கு மொத்தமாக 6 வில்லன்கள் என்று முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த வில்லன்கள் லிஸ்ட்டில் சஞ்சய் தத், பிரித்வி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் கௌதம் மேனனும் விஜய்க்கு வில்லனா அல்லது கேரக்டர் ரோலில் நடிக்கிறாரா என்பதை பொறுத்திருதுதான் பார்க்க வேண்டும்.