தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ரவீந்தர் சந்திர சேகர். இவர் அண்மையில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்.
இந்தத் திருமணம் தமிழ்நாடு முழுக்க வைரலானது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (செப்.23) திருச்செந்தூர் முருகன் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்தர், “என் திருமணம் இந்தளவு பிரபலம் ஆகும் என்று நானே நினைக்கவில்லை. என் திருமணத்தை காட்டி ஒரு சேனல் நன்கு கல்லா கட்டிவிட்டது.
நான் செல்லும் இடமெங்கிலும் மக்கள் எங்களை வாழ்த்துகின்றனர். நான் தனித் தீவு செல்லப் போகிறேன் என்பதெல்லாம் பொய்” என்றார்.
சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் தனது சினிமா லிப்ரா புரொக்டக்ஷன் மூலம் பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். மேலும் பிக்பாஸ் விமர்சகராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil