புதுடில்லி: டில்லி மற்றும் அதன் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நொய்டா மற்றும் குருகிராம் நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
உ.பி.,யில் பல மாவட்டங்களில் சுவர் இடிந்தும், இடி தாக்கியும் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். பிரோசோபாத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அலிகார்க் நகரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
நேற்று மாலை 5:30 மணி முதல் இன்று காலை 8:30 மணி வரையிலான காலகட்டத்தில் டில்லியில் 40.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. 3வது நாளாக மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நொய்டா, கிரேட்டர் நொய்டா பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குருகிராம் நகரத்தில், தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்த படி பணிபுரிய அனுமதிக்கும்படி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement