தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஆன்ட்ரியா, இயக்குநர் கௌதம் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம், கமல் ஹாசனின் விஸ்வரூபம், மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த ஒற்றன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மீண்டும் மிஸ்கின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள பிசாசு -2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
நடிகையாக மட்டுமில்லாமல் பின்னணி பாடகி, டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்ட ஆன்ட்ரியா, புஷ்பா படத்தில் பாடிய ‘உம் சொல்லிறியா மாமா’ பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. சினிமா பாடல்கள் மட்டுமின்றி, ஆல்பங்களிலும் இவர் தொடர்ந்து பாடி அசத்தி வருகிறார்.
இதனை அறிந்து ஆல்பங்களில் இவர் பாடியுள்ள பாடல்களில் மிக சிறந்தவற்றை தொகுத்து வெளியிட பிரபல இசை அப்ளிகேஷன் நிறுவனமன ஸ்பாட்டிஃபை முன்வந்தது. இதற்கு ஆன்ட்ரியாவும் ஓகே சொல்லவே, Equal India என்ற பெயரில் ப்ளே லிஸ்ட்டை உருவாக்கியுள்ளது ஸ்பாட்டிஃபை. அத்துடன் இந்திய பெண்களுக்கான பிரத்யேக ப்ளே லிஸ்ட் என்ற கேப்ஷனுடன் அதனை விளம்பரப்படுத்தவும் செய்துள்ளது.
நெப்டியூன் கிரகத்தின் ஃபோட்டோவை வெளியிட்ட நாசா… எப்படியிருக்குன்னு பாருங்க!
இதில் முக்கிய அம்சமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பராம்பரிய சின்னமாக விளங்கும் நியூயார்க் ஸ்கொயர் கட்டிடத்தில் ஆன்ட்ரியாவி்ன் புகைப்படத்துடன்கூடிய Equal India ஆல்பத்தின் விளம்பரத்தை இடம்பெற செய்துள்ளது ன ஸ்பாட்டிஃபை நிறுவனம்.
நியூயார்க் நகரின் பாரம்பரியமான இடத்தில் தமது புகைப்படம் இடம்பெற்றிருப்பதை காணும்போது தம்மை ராணி போல் உணர்வதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் ஆன்ட்ரியா.