உதகை அருகே உள்ள மேலூர் ஊராட்சியின் துணைத் தலைவர் நாகராஜ் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டு மிரட்டும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
நீலகிரி மாவட்டம் மேலூர் பஞ்சாயத்தில் ரூ.20 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான கட்டுமான பணிகளுக்கு மூன்று சதவீதம் கமிஷன் தரவேண்டுமென்று ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஒப்பந்ததாரர்களை வற்புறுத்துவதும், அதற்கு ஒப்பந்ததாரர்கள் ஏற்கெனவே பொறியாளருக்கு ஐந்து சதவீதமும் ஓவர்சீருக்கு 12 சதவீதமும், பிடிஒ, கம்ப்யூட்டர் செக்ஷன் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் கமிஷன் கொடுத்த பிறகுதான் பில் தொகையை பெற முடிவதாக துணைத் தலைவரிடம் கூறுகின்றனர்,
இதற்கு துணைத் தலைவர் நாங்கள் ஐம்பதாயிரம் வரை ஒவ்வொரு முறையும் டொனேஷன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் எங்களுக்கு கொடுக்க வேண்டிய மூன்று சதவீத கமிஷனை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து துணைத் தலைவர் நாகராஜிடம் கேட்டபோது, ஆறு மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவை யாரோ எடிட் செய்து வைரலாக்கி வருகின்றனர், இது குறித்து சைபர் கிரைமில் புகார் தெரிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM